Advertisment

வீடியோ: ஆட்டத்தை மாற்றிய 18-வது ஓவர்; லட்டு மாதிரி கேட்சை மிஸ் செய்த இந்திய வீரர்!

Arshdeep Singh dropped a relatively easy catch of Asif Ali in the 18th over; against Pakistan in Asia Cup 2022 Tamil News: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ரவி பிஸ்னாய் வீசிய 18-வது ஓவரில், ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்ட நிலையில், அவரை சமூக வலைதளத்தில் வசைபாடி வருகின்றனர் சில கிரிக்கெட் ரசிகர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket video Tamil News: Arshdeep Singh Drops Sitter, Rohit Sharma's Reaction Goes Viral

Rohit Sharma's Reaction for Arshdeep Singh Dropping a catch Goes Viral Tamil News

 IND vs PAK Asia cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று ஞாயிற்று கிழமை இரவு 7:30 மணிக்கு துபாயில் தொடங்கிய சூப்பர் “4” சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

Advertisment

கிரிக்கெட் பரம போட்டியாளர்களான இவ்விரு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் கடைசி வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் இருந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னில் வெளியேறினார். ஆனால், பிறகு வந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்து. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.

லட்டு மாதிரி வந்த கேட்சை மிஸ் செய்த இந்திய வீரர்… வசைபாடும் நெட்டிசன்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சொதப்பல்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துபோனது. ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர். இதேபோல், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

லட்டு மாதிரி வந்த கேட்சை மிஸ் செய்த அர்ஷ்தீப் சிங்கைப் பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். அப்போது அவர் பற்களை கடித்துக்கொண்டு கொடுத்த ரியாக்ஷன் வீடியோவாக பதிவான நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், அர்ஷ்தீப் சிங் அந்த கேட்சை தவற விட்டதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். சிலர் ஆதரவாக பேசி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை எனவும் தெரிவித்து அர்ஷ்தீப் சிங்ற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில், "யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்." என்று கூறி அவர் பதிவிட்டுள்ளார்.

இதே போல், பாகிஸ்தான் வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Pakistan Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment