Advertisment

பவுண்டரி லைனில் ‘சைக்கிள் கிக்’: டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் இப்படியொரு கேட்சா? வீடியோ

பவுண்டரி லயனில் 'சைக்கிள் கிக்' விட்டு கேட்ச் பிடிக்கும் வீரரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

author-image
WebDesk
Feb 13, 2023 12:51 IST
Cricket video Tamil News: “bicycle kick” catch, Kiran Tarlekar

Shree Chashak – 2023, Belgaum, Karnataka: “bicycle kick” catch Kiran Tarlekar, video rounds on social media

Tennis-ball cricket, “bicycle kick” catch, Kiran Tarlekar Tamil News: ஸ்ரீ சாஷாக் 2023 மாவட்ட அளவிலான டென்னிஸ்-பால் கிரிக்கெட் போட்டிகள் கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் எஸ்ஆர்எஸ் ஹிந்துஸ்தான் மற்றும் சாய்ராஜ் ஏ அணிகள் மோதின. இதில், பீல்டிங் செய்த கிரண் தர்லேகர் என்ற வீரரின் "கேட்ச் முயற்சி" வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில், டீப் மிட்விக்கெட் திசையில் நிற்கும் கிரண் தர்லேகர், பேட்ஸ்மேன் சிக்சருக்கு பறக்க விட்ட பந்தை முதலில் குதித்து கேட்ச் பிடித்து விடுகிறார். ஆனால், சரியான பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறும் அவர், பந்தை மேலே தூக்கி போடுகிறார். பந்து பவுண்டரி லயனைத் தாண்டி மேலே செல்கிறது. பின்னர் பவுண்டரி லயனைத் தாண்டிச் செல்லும் கிரண் தர்லேகர், பந்தை கால்பந்து ஸ்டைலில் ஒரு 'சைக்கிள் கிக்' விடுகிறார். இப்போது பந்து மீண்டும் மைதானத்திற்குள் வந்து விடுகிறது. பவுண்டரி லயனிற்கு அருகில் நிற்கும் மற்றொரு வீரர் பந்தை லாவகமாக பிடித்து விடுகிறார்.

கிரண் தர்லேகரின் இந்த அசாத்தியமான முயற்சி மைதானத்திற்கு வெளியில் இருந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த பலராலும் பாரட்டப்பட்டது. அவர் கேட்ச் பிடிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியும் வருகிறது. மேலும், பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், "கால்பந்து விளையாடத் தெரிந்த ஒரு பையனை அழைத்து வரும்போது இதுதான் நடக்கும்!!" என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிச்சயமாக எல்லா காலத்திலும் மிகப்பெரிய கேட்ச்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Viral Video #Cricket #Sports #Social Media Viral #Viral #Sachin Tendulkar #Karnataka State #Video #Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment