Advertisment

ஐ.பி.எல் ஃபீவர் ஆரம்பம்: வலைப் பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Cricket video Tamil News; CSK captain MSD hits SIXES net session ahead of IPL 2023

CSK captain MS Dhoni begins prep for IPL 2023 by hitting SIXES during nets session and video goes viral Tamil News

IPL 2023: Chennai Super Kings Captain Mahendra Singh Dhoni Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். (16-வது) டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

Advertisment

இந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை வாங்கியது. இதில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கும், இந்திய வீரர் அஜின்கியா ரகானேவை 50 லட்சத்துக்கும் வாங்கியது. இன்னும் சில வீரர்களை அவர்களின் அடிப்படை விலைக்கு வாங்கியது. இந்த வீரர்களை கொண்டு ஒரு வலுவான அணியைக் கட்டமைத்தும் வருகிறது.

‘சி.எஸ்.கே- வில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை’: சமூக ஊடகத்தில் ரசிகர்கள் ஆதங்கம்!

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை பொறுத்தவரையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.

Advertisment
Advertisement

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போதே வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கேப்டன் தோனி தனக்கு வீசப்படும் பந்துகளை அடித்து நொறுக்குகிறர். அவற்றில் சில சிக்சருக்கு பறக்கின்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Cricket Sports Chennai Chennai Super Kings Ipl Auction Csk Chennai Csk Ipl News Ipl Cricket Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment