Hardik Pandya Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 8 ஆம் தேதி, அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அறிவித்தது. அதன்படி அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். கே.எல் ராகுல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த அணி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பந்துவீசி பயிற்சியில் ஈடுபடும் ஹர்த்திக் பாண்ட்யா பும்ரா ஸ்டைலில் பந்துவீசி அசத்துகிறார். தபோது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வீடியோ அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்த இன்ஸ்டா பதிவில் ஹர்த்திக் பாண்ட்யா, “எப்படி இருக்கிறது பூம்?” என்று சிரிக்கும் ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார். இதை பும்ராவும் பாராட்டி இருக்கிறார். மேலும், அவரது சகோதரர் க்ருணால் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரும் வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil