Advertisment

IND vs NZ 1st ODI: போலி ஸ்டம்பிங் அப்பீல் செய்த இஷான் கிஷன்; முன்னாள் வீரர்கள் காட்டம்

இந்திய விக்கெட் கீப்பர் வீரர் இஷான் கிஷன் நியூசிலாந்து வீரர் லதாமை போலி ஸ்டம்பிங் அப்பீல் செய்த சம்பவம் முன்னாள் இந்திய வீரர்களை பெரிதும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Cricket video Tamil News: Ishan Kishan draws flak for fake appeal against Tom Latham

Ishan Kishan tries to imitate Tom Latham. (Screengrab)

India vs New Zealand, 1st ODI - Ishan Kishan Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசி அபார சாதனை படைத்தார்.

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்களில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மான் கில் 208 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ரன்களும் அரைசதம் விளாசிய மிட்செல் சான்ட்னர் 57 ரன்களும் எடுத்தனர். சதம் விளாசி இறுதிவரை போராடிய மைக்கேல் பிரேஸ்வெல் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போலி ஸ்டம்பிங் அப்பீல் செய்த இஷான் கிஷன்; முன்னாள் வீரர்கள் காட்டம்

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 350 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய போது, இந்திய விக்கெட் கீப்பர் வீரர் இஷான் கிஷன் போலி ஸ்டம்பிங் அப்பீல் செய்தார். இது முன்னாள் இந்திய வீரர்களை பெரிதும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. மேலும், இஷான் கிஷன் மீது கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆட்டத்தின் 16வது ஓவரில், வேடிக்கை காட்ட விரும்பிய இஷான் கிஷன் ஸ்டம்பில் சிவப்பு லைட் எரிவதை காட்டி அவுட் என நியூசிலாந்து வீரர் லாதமை ஏமாற்ற முயன்றார். ஆனால் ரீப்ளேயில் இஷான் தான் பெயிலை தட்டி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதோடு நின்றுவிடாமல், இஷான் கிஷன் ஸ்கொயர் லெக் நடுவரிடம் அப்பீல் செய்தார்.

முன்னதாக குல்தீப் வீசிய பந்தை எதிர்கொண்ட லாதம் அதை மிட்-விக்கெட்டில் டக் செய்தார். அங்கு நின்ற கேப்டன் ரோகித் சர்மா அதை எடுத்தார். இந்த நேரத்தில் ஸ்டம்பில் இருக்கும் சிவப்பு லைட் மின்னத் தொடங்கியது. இதனால், கேப்டன் ரோகித் அப்பீல் செய்தார். மறுபுறம் குல்தீப்பும் ஆர்வமுடன் காணப்பட்டார். பின்னர் கேமரா குழப்பமடைந்த லதாமை நோக்கிச் சென்றது. அதேசமயம் இஷான் ஸ்கொயர் லெக் நடுவரைப் பார்த்தார். நியூசிலாந்து டக்அவுட் கூட குழப்பத்தில் இருந்தது.

publive-image

அப்போதுதான் ரீப்ளே முழுப் படமும் தெரிந்தது. லாதம் பந்தை விளையாடிய பிறகு, இஷான் தனது கையுறைகளால் பெயில்களை எடுத்தார். அப்போது நியூசிலாந்து கேப்டன் லதம் கிரீஸில் கூட இருந்தார். எனினும், இஷான் அவரை ஸ்டம்பிங் முயற்சி செய்து குழம்பச் செய்தார். இந்த வேடிக்கையான செயலை பலரும் பாராட்டினாலும், வர்ணனையில் இருந்த முன்னாள் இந்திய வீரர்களான கவாஸ்கரும் கார்த்திக்கும் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை.

"நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அப்பீல் (மேல்முறையீடு) செய்யலாம். ஆனால் அது சரியான விஷயம் அல்ல," என்று கார்திக் கூறினார்.

"நகைச்சுவைக்காக என்றால் பரவாயில்லை. ஆனால் பிறகு சென்று மேல்முறையீடு செய்வது சரியானது என்று நினைக்க வேண்டாம். இதற்கு முன்பு இந்தியா பேட்டிங் செய்யும் போது என்ன நடந்தது என்பதை டாம் லாதமிடம் நகைச்சுவையாகச் சொல்லலாம் அல்லது செய்து காட்டியிருக்கலாம். அது புரிகிறது. ஆனால் மேல்முறையீடு செய்திருக்கக்கூடாது. அது முறை இல்லை. அது கிரிக்கெட் அல்ல" என்றும் அவர் கூறினார்.

publive-image

லதாமுக்கு நடந்தது தேஜாவு

லதாமை இஷான் கிஷன் இப்படி கேலி செய்ய ஒரு முக்கிய காரணம் இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா பேட்டிங் செய்த போது, ​​இதுவரை கண்டிராத வினோதமான ஆட்டமிழப்பை செய்து இருந்தார்.

டேரில் மிட்செல் ஹர்திக் பாண்டியாவுக்கு வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பின் மேல் பகுதியில் இருந்த பெயிலை தொடாமல் கடந்து சென்றது. அப்போது ஸ்டம்பின் லைட் மின்னவே நியூசிலாந்து அணியினர் அப்பீலுக்கு சென்றனர். ரீபிளேயில் அவுட் கொடுக்கப்பட்டு பாண்டியா வெளியேறினார். உண்மையில் ஸ்டம்புக்கு மேல் கடந்து சென்ற பந்தை லாவகமாக தனது கையுறைக்குள் பிடிக்கும் முன் கீப்பர் லதாம், பந்து கடந்து வந்த நேரத்தை கணக்கிட்டு ஸ்டம்பில் தனது கையுறையைக் கொண்டு தட்டிவிட்டார். இதனால், பாண்ட்டியா அவுட் ஆனது போல் தெரிந்தது.

இருப்பினும், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் செய்த அந்த ரீபிளேயில் பாண்டியா அவுட் இல்லை என்பதும், லதாம் தான் ஏதோ தவறு செய்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இஷான் கிஷன் லாதமுக்கு தேஜாவு நடக்க செய்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இஷான் இஷான் மற்றும் லதம் ஸ்டம்பிங் செய்த வீடியோக்களும் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடைய அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team Hardik Pandya Indian Cricket Ishan Kishan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment