IPL 2023 Playoffs - Chennai Super Kings - MS Dhoni Tamil News: டெல்லியை தகர்த்து பிளேஆஃப் முன்னேறிய சி.எஸ்.கே வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறிய நிலையில், நேற்றிரவு 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் நடந்து முடிந்தது. அடுத்ததாக, இந்த தொடருக்கான பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னையில் குவாலிஃபயர் -1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களும், அகமதாபாத்தில் குவாலிஃபையர் - 2 மற்றும் இறுதிப்போட்டியும் நடக்கிறது. இதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. தொடர்ந்து மறுநாள் புதன் கிழமை (மே 24-ந்தேதி) நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் சந்திக்கின்றன.
From Day 1 to Q1 now! 🤝 @gujarat_titans
See you 🔜 at Anbuden!#CSKvGT #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/FEdwHGf7Eh— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
குவாலிஃபயர் -1ல் வெற்றியை ருசிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி கண்ட அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் குவாலிஃபையர் 2ல் மல்லுக்கட்டும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் -1ல் வெற்றி பெற்ற அணியுடன் ஐ.பி.எல் 2023-க்கான இறுதிப்போட்டியில் மோதும். இப்போட்டியானது வருகிற 28ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். 26ம் தேதி குவாலிஃபையர் 2 போட்டி இதே மைதானத்தில் தான் நடக்கிறது.
டெல்லியை தகர்த்த சென்னை
முன்னதாக, கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்த 67வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்களை குவித்தது. சென்னை அணியில் தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர்களான கான்வே 87 ரன்களும், ருதுராஜ் 79 ரன்களும் எடுத்தனர். 9 பந்தில் 3 சிக்ஸர்களை மட்டும் பறக்கவிட்ட துபே 22 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 20 ரன்னுடனும், தோனி 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 224 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. 86 ரன்கள் குவித்த கேப்டன் வார்னரின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், லீக் சுற்றின் முடிவில் சென்னை 14 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று 2வது அணியாக பிளேஆஃப்-க்கு தகுதி பெற்றது.
Q-ila win done right! ✅#DCvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/n5UoaBVZDt
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
வரலாறு படைத்த சென்னை - வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
இந்நிலையில், நடப்பு சீசனில் சென்னை அணி பிளேஆஃப்-க்குள் நுழைந்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை (14 சீசன் - 12முறை) பிளேஆஃப்-க்குள் அடியெடுத்து வைத்த அணி என்கிற பெருமையும், சாதனையையும் படைத்துள்ளது. இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி (10 முறை) 2வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், பிளேஆஃப் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளும் சென்னை அணி நேற்று இரவு சென்னை திரும்பினர். அப்போது, சென்னை அணி வீரர்களை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வரும்போது அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ரசிகர்கள் சத்தம் எழுப்பினர். கேப்டன் எம்.எஸ். தோனி வந்த போது 'தோனி… தோனி… தோனி…' என கூச்சல் போட்டு வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Home, Sweet Den! 💛#VanakkamChennai #WhistlePodu 🦁 pic.twitter.com/WrBcOiTVTj
— Chennai Super Kings (@ChennaiIPL) May 21, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.