INDvSL 1st ODI: Rohit Sharma tamil news: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது. இப்போட்டியானது பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது.
ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகர்… கன்னத்தை தட்டி ஆறுதல் சொன்ன ரோகித் – வீடியோ
இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று மாலை கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, மைதானத்தில் குழுமிருந்த ரசிகர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அவர்களுடன் செல்ஃபீ மற்றும் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். அப்போது, அங்கிருந்த வேலியைப் பிடித்தவாறு நின்ற ஒரு இளம் ரசிகர் ரோகித்தை கண்டதும் ஆனந்த கண்ணீர் விட்டு கண்ணைக் கசக்கினார்.
அந்த இளம் ரசிகரின் கண்ணீரைக் கண்டவுடன் அவரது அருகில் சென்றார் ரோகித். பிறகு அவரின் கண்ணீரைத் துடைத்தவாறு, அவரது கன்னத்தில் கிள்ளி தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Cricketer Rohit Sharma interacting with an young cricket fan from Assam in Guwahati.
— Pramod Boro (@PramodBoroBTR) January 9, 2023
Adorable Moments!@ImRo45 pic.twitter.com/Nyzc4D9fHg
இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ரோகித்
இலங்கை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் – கில் ஜோடி களமிறங்கினர். இதில் அரைசதம் அடித்த கில் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடியில் இருந்த கேப்டன் ரோகித்தும் அரைசதம் விளாசினார்.
பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து சில பவுண்டரிகளை ஓட விட்ட அவர் தில்ஷான் மதுஷங்க வீசிய 23.1 வது ஓவரில் இன்சைடு எட்ச் ஆகிய போல்ட் அவுட் ஆனார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.
Captain @ImRo45 brings up his 47th ODI FIFTY!
— BCCI (@BCCI) January 10, 2023
A look at one of his MAXIMUMS in the innings so far.
Live – https://t.co/MB6gfx9iRy #INDvSL @mastercardindia pic.twitter.com/KdjsFEZdxr
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/