India vs NewZealand T20 Series, Sanju Samson Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இப்போட்டியானது இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
Just 1️⃣ sleep away from the first #NZvIND T20I ⏳#TeamIndia pic.twitter.com/qiJXEAlG43
— BCCI (@BCCI) November 17, 2022
பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டிய சஞ்சு
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டிக்காக இன்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். அந்த வீடியோவை பிசிசிஐ அதன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தது. அந்த வீடியோவில் விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் ஐயர், ஷுப்மான் கில், ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் பயிற்சி செய்வதை காணலாம். அப்போது, அனைத்து பேட்ஸ்மேன்களும் லாஃப்ட் ஷாட்களை அடித்தனர்.
— BCCI (@BCCI) November 16, 2022
இதில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விளையாடிய ஷாட்கள் பார்ப்போரை கவரும் வண்ணம் இருந்தது. அவர் நோ-லுக் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதாவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட பிறகு அவர் பந்து செல்லும் தூரத்தை கவனிக்கவே இல்லை. அவரது கவனம் எந்த இடத்தில் பந்தை பிக் செய்து சிக்ஸர் விளாசினோம் என்பதில் தான் இருந்தது.
சஞ்சு சாம்சன் அதுபோன்ற இரண்டு சாம்சன் ஷாட்டை பறக்கவிட்டார். ஒருமுறை ஸ்கொயர் லெக்கில், அடுத்தது லாங் லெக்கை நோக்கி நன்றாக இருந்தது. இந்த ஷாட்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களிடமிருந்தும் பாராட்டைப் பெற்றன. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
TICK..TICK..BOOM 💥💥
— BCCI (@BCCI) November 17, 2022
All charged up for the #NZvIND T20I series opener#TeamIndia 🇮🇳 pic.twitter.com/AsNSTeMqq8
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil