Umran Malik Tamil News: இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வரிசை கடந்த 15 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்திய அணி இப்போது ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சு வரிசையில் அதிக பெஞ்ச் வலிமையைக் கொண்டுள்ளனர். இப்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியினரை பயமுறுத்துவது இப்போது புதிதல்ல. இதையெல்லாம் மீறி உம்ரான் மாலிக் கையில் பந்து வரும்போதெல்லாம் வேறுவிதமான பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க ஒருவர் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. அது அவரது முகம் பாவனை தான். உம்ரானைப் போல் சர்வதேச அளவில் 150 கிமீ வேகத்தை வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் வீசி கடந்ததில்லை.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் அவர் அதை மீண்டும் செய்து மிரட்டினார். வேகமான பந்து வீச்சில் சாதனை படைத்த உம்ரான் மாலிக், ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை ஆட்டமிழக்க செய்தார். அந்த ஓவரில் முதல் பந்தை மணிக்கு 148.6 கிமீ யார்க்கருடன் தனது ஸ்பெல்லைத் தொடங்கினார்.
அப்போது நியூசிலாந்தின் அதிரடி வீரர் பிரேஸ்வெல் பந்துகளை விரட்ட மறுத்தார். ஓரிரு பந்துகளுக்குப் பிறகு, அவர் டிராக்கில் சார்ஜ் செய்து உம்ரானின் பந்தை மேலே தூக்கி அடிக்க சென்றார். அந்த பந்தை உம்ரான் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசிய நிலையில், அதை பிரேஸ்வெல் முற்றிலும் தவறவிட்டார். அதனால் பந்து அவருக்கு பின்னால் இருந்த ஸ்டம்பை பதம் பார்த்தது. ஸ்டம்பின் மேல் இருந்த பெயில்ஸ் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் ஸ்லிப்-பீல்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் தலைகளுக்கு மேல் பறந்து 30 யார்டு வட்டத்திற்கு மேல் தரையிறங்கி இருந்தது.
இதன் பிறகு, உம்ரான் நியூசிலாந்தின் டாப் ஸ்கோரர் டேரில் மிட்செலை (35) ஆட்டமிழக்கச் செய்தார். 2.1 ஓவர்களை வீசிய அவர் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Umran Malik comes into the attack and Michael Bracewell is bowled for 8 runs.
A beauty of a delivery from Umran 💥
Live - https://t.co/1uCKYafzzD #INDvNZ @mastercardindia pic.twitter.com/nfCaYVch4b— BCCI (@BCCI) February 1, 2023
Umran malik 🔥🔥 bails out of the park#INDvsNZpic.twitter.com/bHQkXcNdyn
— Sofi Aijaz 🌐 (@imsofiaijaz) February 1, 2023
What a Bowled 🔥😯 Umran Malik@umran_malik_01 🇮🇳
2/9- 2.1 😯😂 pic.twitter.com/GutGyZp5vd— Mohammad Imran (@imran213141) February 1, 2023
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.