Light and sound show at Eden gardens – Virat Kohli and Ishan Kishan dancing viral video tamil news: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தியில் கடந்த செவ்வாய் கிழமை (ஜனவரி 10 ஆம் தேதி) நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சுக்கு
தாக்குப் பிடிக்காத அந்த அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 215 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி திருப்புமுனையை ஏற்படுத்திய
குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல்
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா (17), சுப்மான் கில் (21), விராட் கோலி
இந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை துரத்திய பாண்டியா 36 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த வந்த அக்சர் படேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 21 ரன்னில் அவுட் ஆனார். பிறகு களத்தில் இருந்த ராகுலுடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.
இறுதியில், 43.2 வது ஓவரில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தனது சுழல் பந்துவீச்சில் மீண்டும் ஒருமுறை வித்தை காட்டிய குலதீப் யாதவ் 3 விக்கெட் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
A victory by 4️⃣ wickets for #TeamIndia in the second #INDvSL ODI here in Kolkata and the series is sealed 2️⃣-0️⃣ 👏👏
— BCCI (@BCCI) January 12, 2023
Scorecard ▶️ https://t.co/jm3ulz5Yr1 @mastercardindia pic.twitter.com/f8HvDZRJIY
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை மறுநாள்ஞாயிற்று கிழமை (ஜனவரி 15) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
For his impressive performance with the ball, @imkuldeep18 gets the Player of the Match award as #TeamIndia register a 4⃣-wicket victory in the second #INDvSL ODI 👏👏
— BCCI (@BCCI) January 12, 2023
Scorecard ▶️ https://t.co/jm3ulz5Yr1 @mastercardindia pic.twitter.com/jrSGU8JrB7
வண்ண விளக்குகளால் ஜொலித்த ஈடன் கார்டன்… படு ஷோக்காக டான்ஸ் போட்ட கோலி – இஷான்
இலங்கை அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய வெற்றியை ருசித்து தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஈடன் கார்டன் மைதானமே வண்ண விளக்குகளால் ஜொலித்தது. அங்கு ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்றவாறு மின்விளக்குகள் வெளிச்சத்தை பரப்பின. மேலும், மைதானத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்த இந்த மின்விளக்குகள் அங்கு குவிந்திருந்த ரசிகர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அந்த வண்ண காட்சிகளை கண்டு ரசித்ததோடு, தங்களின் மொபைல் போனிலும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், வண்ண விளக்குகளால் ஜொலித்த ஈடன் கார்டன் மைதான வீடியோவை முன்னாள் இந்திய கேப்டன்னும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி
Congratulations to indian team for winning the series .. well doneCAB for the wonderful laser show to celebrate it @bcci pic.twitter.com/MsfHzhLjIP
— Sourav Ganguly (@SGanguly99) January 12, 2023
This is not Melbourne or, Lords or, Sydney.
— Arnesh De (@ArneshDe) January 12, 2023
This is EDEN GARDENS, KOLKATA.@BCCI @CabCricket Hat's Off.
What a Light and Sound Show. Best ever
P.S.: Full Video Coming Soon#INDvSL #Kolkata #EdenGardens #LightandSound #Laser #CricketTwitter pic.twitter.com/Hy5Hfl66Y8
Laser show at the Eden Gardens 🤩 pic.twitter.com/URJ8sVOzuK
— Naman Agarwal (@CoverDrivenFor4) January 12, 2023
இதுஒருபுறமிருக்க, மைதானம் முழுதும் மின்விளக்கின் வெளிச்சம் பரவியபோது, மைதானத்தில் ஓரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் தொடக்க வீரர் இஷான் கிஷன் படு ஷோக்காக நடனமாடினார். அவர்கள் நடனமாடியதை ரசிகர்கள் தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோவும் இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli and Ishan Kishan dancing after the yesterday's ODI series win at Eden Gardens! pic.twitter.com/pV6BvsFIIZ
— CricketMAN2 (@ImTanujSingh) January 13, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“