News about Yusuf Pathan, Mitchell Johnson in tamil: லெஜெண்ட்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தற்போது குவாலிபயர் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் – இந்தியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பில்வாரா கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வாட்சன் 65 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்தியா கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஸ் டெய்லர் 84 ரன்கள் எடுத்தார்.
மைதானத்தில் அடிக்கப் பாய்ந்த மிட்சல் ஜான்சன்- யூசுஃப் பதான்: கிரிக்கெட்டை தலைகுனிய வைத்த வீடியோ
இந்த ஆட்டத்தில் 19வது ஓவரின் முடிவில் மிகவும் கசப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அந்த ஓவரின் கடைசி பந்தில் யூசுப்பை ஜான்சன் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். முன்னதாக, ஜான்சனின் ஓவரில் யூசுப் முதல் மூன்று பந்துகளில் 6, 4 மற்றும் 6 என பறக்கவிட்டார். ஆனால், 19வது ஓவரில் டீப் மிட்-விக்கெட்டில் அடிக்க முயன்ற யூசுப் ஃபீல்டர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் வெளியேற்றப் பட்டவுடன், விஷயங்கள் அசிங்கமாக மாறித் தொடங்கியது.
பிறகு, யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வார்த்தைப் போர் முற்றிப்போகவே, இருவரும் ஒருவரையொருவர் தாக்க பாய்ந்தனர். கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர். அப்போது ஜான்சன் யூசுப்பைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். கிரிக்கெட்டை தலைகுனிய வைத்துள்ள இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) October 3, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil