பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்… 155 கி.மீ வேகத்தில் வீசி மிரட்டல் - வீடியோ!
இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்தை வீசியதன் மூலம் அபாரமான சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்தை வீசியதன் மூலம் அபாரமான சாதனையை படைத்துள்ளார்.
Watch video: Umran Malik dismisses Dasun Shanaka with 155kph scorcher to break Jasprit Bumrah's record Tamil News
Umran Malik Shatters Bumrah's Record Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று செவ்வாய்கிழமை (ஜனவரி 3 ஆம் தேதி) இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்தது.
Advertisment
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷன் கிஷன் 37 ரன்னும், தீபக் ஹூடா 41 ரன்னும், அக்சர் பட்டேல் 31 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணியில் ஹசரங்கா, தீக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷான்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதிரடியாக ரன்களை எடுத்த கேப்டன் தசுன் ஷனக 45 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை களத்தில் இருந்த சாமிக்க கருணாரத்னே இந்தியாவிற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இலங்கையின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவரால் அந்த பந்தை பவுண்டரி விரட்ட முடியவில்லை.
தவிர, அவருடன் ஜோடியில் இருந்த டில்ஷான் மதுஷங்க ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால், வெற்றி முகம் இந்தியா பக்கம் திரும்பியது. இறுதியில் இலங்கை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியாவுக்கு திரில் வெற்றி கிடைத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
Advertisment
Advertisements
பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்… 155 கி.மீ வேகத்தில் வீசி மிரட்டல்
இந்த ஆட்டத்தில் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக, 163 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்க அதிரடியாக ரன்களை குவித்து வந்த கேப்டன் தசுன் ஷனக-வின் விக்கெட்டை வீழ்த்தினார். உம்ரான் மாலிக் ஓவரில் அவர் பவுண்டரிகளை விரட்டி இருந்த நிலையில், அவருக்கு அந்த ஓவரின் 4வது பந்தை 155 கி.மீ வேகத்தில் வீசினார். அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முயன்ற போது யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் தசுன் ஷனக.
இந்நிலையில், உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்தை வீசியதன் மூலம் அபாரமான சாதனையை படைத்துள்ளார். அவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக வேகத்தை எட்டிய ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை பதிவு செய்யப்பட்ட பும்ராவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 153.36 கி.மீ ஆக இருந்து வருகிறது. தொடர்ந்து மொஹமட் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில், பும்ராவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார் உம்ரான் மாலிக்.