சில்வா ஸ்டம்ப் மைக்கில், அவரது தாயார் கோலியின் மிகப்பெரிய ரசிகை என்பதையும், அவர் விளையாடுவதைப் பார்ப்பதற்காகவே அவர் மைதானத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தினார்.
Virat Kohli meets Joshua Da Silva's mother Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisment
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சதம் விளாசிய முன்னாள் இந்திய கேப்டன் கோலி 121 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும், ஜடேஜா 61 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்திய அணியை விட 352 ரன்கள் பின்தங்கியுள்ளது. கிர்க் மெக்கென்சி 17 ரன்னுடனும், கிரேக் பிராத்வைட் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
Advertisment
Advertisements
ஸ்டெம்ப் மைக் சாட்டிங் - கோலியை ஆரத்தழுவி சில்வா தாயார்
நேற்றைய ஆட்டத்திற்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணியின் வீரர்கள் செல்லும் பேருந்துக்கு சென்றார். அப்போது அவரை பார்த்ததும் ஆரத்தழுவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வாவின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கோலி 121 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா ஸ்டம்ப் மைக்கில், அவரது தாயார் கோலியின் மிகப்பெரிய ரசிகை என்பதையும், அவர் விளையாடுவதைப் பார்ப்பதற்காகவே அவர் மைதானத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தினார். "எனது அம்மா என்னை தொலைபேசியில் அழைத்து, விராட் கோலிக்காக போட்டியைக் காண வருவதாகச் சொன்னார். அதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அவர் கூறினார்.
சில்வா கூறியது போலவே, அவரது தாயார் நேற்று வெள்ளிக்கிழமை ஸ்டேடியத்தில் இருந்தார். கோலி நீண்ட இடைவெளிக்குப்பிறகு அவரது வெளிநாட்டு டெஸ்ட் சதம் விளாசுவதையும் நேரில் கண்டு ரசித்தார். பின்னர் சில்வாவின் தாயார், இந்திய அணியின் பேருந்துக்கு அருகில் கோலியைச் சந்தித்தார். அப்போது அவரை ஆரத்தழுவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். சில்வாவின் தாயார் உணர்ச்சிவசப்பட்ட தருணத்தை கிளிக் செய்தபோது அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.