Advertisment

உள்ளே வெளியே ஆடிய சாஹல்… குழம்பி போன ரசிகர்கள்: உண்மையில் நடந்து என்ன? - வீடியோ

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் சாஹல் களத்திற்கு உள்ளே வெளியே ஓடியது, ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket video: Yuzvendra Chahal return after Hardik Pandya, Rahul Dravid call, rules stops Tamil News

West Indies vs India 1st T20I -  yuzvendra chahal Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாவெல் 48 ரன்னும், பூரன் 41 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக அறிமுக வீரரான திலக் வர்மா 39 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

உள்ளே வெளியே ஆடிய சாஹல்

இந்த ஆட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டின் கையில் 9-வது பேட்ஸ்மேன் குல்தீப் யாதவ் ஆட்டமிழந்த பிறகு, யுஸ்வேந்திர சாஹல் 10-வது இடத்தில் பேட்டிங் செய்யத் தயாரானார். வெளியில் டக்-அவுட்டில் இருந்த சாஹல் வேகமாக ஓடி வந்து மைதானத்தின் நடுப்பகுதியை அடைந்தார். அப்போது கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை வெளியில் வருமாறு திரும்ப அழைத்தனர்.

publive-image

சுவாரஸ்யமாக, 10-வது இடத்தில் பேட்டிங் செய்ய முகேஷ் குமார் ஏற்கனவே தயாராக இருந்தார். அவர் பேட்கள் மற்றும் ஹெல்மெட்டுடன் பவுண்டரில் கோட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அதாவது, சாஹலுக்குப் பதிலாக 10-வது இடத்தில் அவரை பேட்டிங் செய்ய அணி நிர்வாகம் விரும்பியது. இதனை களத்தில் உதவியை வழங்க சென்ற மாற்று வீரர் உம்ரான் மாலிக் சாஹலிடம் கூறினார்.

அதனால் சாஹல் மீண்டும் பெவிலியனை நோக்கி ஓடத் தொடங்கினார். ஆனால் அவர் ஏற்கனவே களத்திற்குள் இறங்கியதால், நடுவர்கள் சாஹலை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தனர். இது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், விதிப்படி முதலில் பவுண்டரி கோட்டை தாண்டும் வீரர் தான் பேட்டிங் செய்ய வேண்டும். இந்த இடத்தில் முகேஷ் குமார் வரும் முன் சாஹல் களம் புகுந்தார். அதனால் அவரை திரும்பிய அழைத்ததில் எந்த பயனும் இல்லாமல் போனது.

விதி கூறுவது என்ன?

மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விதி 25.2 -இன் படி, "முதல் இரண்டு பேட்டர்களின் இன்னிங்ஸ், மற்றும் நேரத்தின் அழைப்புக்குப் பிறகு ஆட்டத்தை மீண்டும் தொடங்கும் போது எந்த ஒரு புதிய பேட்டரின் இன்னிங்ஸ், ஆட்டத்தின் அழைப்பின் பேரில் தொடங்கும். வேறு எந்த நேரத்திலும், ஒரு அந்த பேட்டர் முதலில் களத்தில் அடியெடுத்து வைக்கும் போது பேட்டரின் இன்னிங்ஸ் தொடங்கியதாகக் கருதப்படும்." என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி பிராவிடன்ஸ் ஸ்டேடியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Hardik Pandya Indian Cricket India Vs West Indies Rahul Dravid Yuzvendra Chahal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment