Cricket viral news in tamil: இங்கிலாந்தில் ஹாலிபாக்ஸ் கிரிக்கெட் லீகின் கிராஸ்லி ஷீல்டி காலிறுதி ஆட்டத்தில் செயிண்ட் மேரிஸ் கிரிக்கெட் கிளப் அணி விளையாடியது. இந்த அணியின் சார்பாக களமிறங்கிய ஆசிப் அலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், இந்த போட்டியின் போது நடந்த அந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை தந்தது.
அது என்ன சம்பவம் என்றால், சிறப்பாக பேட்டை சுழற்றி வந்த ஆசிப் அலி ஒரு நல்ல சிக்ஸர் அடித்தார். அதாவது ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக் மேல் பவுண்டரியைத் தாண்டி தூக்கி அடித்தார். மிகத்துல்லியமாக பவுண்டரிக்கு மேல் பறந்த அந்த சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே ஆசிப் அலி நிறுத்தி வைத்திருந்த காரின் பின்புற கண்ணாடியை பதம் பார்த்தது.
That moment when you hit a massive six only for it crash through your own car windscreen 🤣🤣
— Illingworth St Mary’s CC (@IllingworthCC) June 20, 2021
🔊 Sound on to hear the smash 💥 pic.twitter.com/FNjRMic9U5
இதைப் பார்த்த மற்ற வீரர்கள் குபீரென்று சிரித்தனர். ஆனால் ஆசிப் அலியோ அதிர்ச்சி கலந்த சோகத்தில் மூழ்கினார். அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் பக்கிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
— Illingworth St Mary’s CC (@IllingworthCC) June 20, 2021
இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில் நடந்தது. அயர்லாந்தின் கெவின் ஓ’பிரையனின் அடித்த எட்டு சிக்ஸர்களில் ஒன்று டப்ளினில் உள்ள பெம்பிரோக் கிரிக்கெட் கிளப்பின் அடுத்த வாகன நிறுத்துமிடத்தில் இருந்த தனது காரின் பின்புற ஜன்னல் கண்ணாடியை பதம் பார்த்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு பேசிய ஓ’பிரையன் “நான் காரை அடுத்த முறை வேறு எங்காவது நிறுத்துவேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“