/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T162942.259.jpg)
Cricket viral Tamil News: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று வியாழக்கிழமை நடக்கவுள்ள 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்தை நவம்பர் 14ம் நடக்கும் இறுதிப்போட்டியில் சந்திக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T163405.373.jpg)
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மிகத்துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் இந்தியாவை அதன் தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது. இந்த அபார வெற்றி மூலம், உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தானின் இந்த அபார வெற்றிக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மிக முக்கிய காரணம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T163259.561.jpg)
இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய ஷஹீன் அப்ரிடி, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு பெரிய பின்னடை ஏற்பட்டு, பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T163252.418.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T163233.257.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T163505.600.jpg)
இந்திய அணியை வீழ்த்திய உற்சாகத்தில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அடுத்தடுத்த நடந்த லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா, மற்றும் ஸ்கட்லாந்து ஆகிய அணிகளை தும்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்கட்லாந்து அணியை சந்தித்தபோது பீல்டிங்கில் இருந்த பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடி விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் அவுட் ஆகியதை அப்படியே செய்து காட்டியுள்ளார். ரசிகர்களால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-11T163219.675.jpg)
அந்த வீடியோவில் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் ஷஹீன் அப்ரிடி பீல்டிங் செய்ய தங்களளுக்கு அருகே வந்ததும் அவரது பெயரை சொல்லி அழைக்கிறார்கள். அதற்கு அவர் சைகை காட்டுகிறார். பிறகு ரசிகர்கள் ரோகித் சர்மாவின் பெயரை கூறி சத்தம் போடுகிறார்கள். அப்ரிடி அதற்கு ரோகித் எப்படி அவரது பந்தில் அவுட் ஆனார் என்பதை செய்கிறார்.
பிறகு, ரசிகர்கள் கேஎல் ராகுல் என சத்தம் போடுகிறார்கள். அதற்கு அவர் எப்படி அவுட் ஆனார் என்பதை அப்ரிடி செய்து காட்டுகிறார். பின்னர் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை கூறுகிறார்கள். அதற்கு அப்ரிடி, கோலி எப்படி தனது பந்து அவுட் ஆனார் என்பதையும் அப்படியே செய்கிறார். கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
— Scorpion_Virat (check pinned) (@crickohli18_) November 8, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.