Advertisment

சஞ்சு ஜெர்சியில் சூரியகுமார்: குழம்பிப் போன ரசிகர்கள்… காரணம் இதுதானா?

வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தின் போது இந்திய முன்னணி வீரரான சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து களமிறங்கினார். இது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை கொண்டுவந்தது.

author-image
WebDesk
New Update
Cricket: Why did Suryakumar Yadav wear Sanju Samson’s jersey in first ODI? Tamil News

suryakumar yadav -  sanju samson Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒருநாள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில், இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

சஞ்சு ஜெர்சியில் சூரியகுமார் - குழம்பி போன ரசிகர்கள்

இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து களமிறங்கினார். இது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை கொண்டுவந்தது. இந்த நிலையில், தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது ஆட்டத்திற்கு முந்தைய நாள், சூரியகுமார் தனது ஜெர்சியின் அளவில் பிரச்சினை உள்ளது குறித்து அணி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதை வைத்து போட்டோ ஷூட் செய்ய முடிந்தாலும், தனது ஜெர்சியின் அளவை மாற்றுமாறு கோரியிருந்தார். இருப்பினும், போட்டியின் போது வழங்கப்பட்ட ஜெர்சியும் ‘பெரியது’ (L) என்பதற்குப் பதிலாக ‘நடுத்தர’ (M) அளவில் இருந்தது. சஞ்சு சாம்சன் போட்டியில் விளையாடாத நிலையில், அவரது ஜெர்சியை போட்டுக் கொண்டார் சூரியகுமார் யாதவ்.

“அவரது ஜெர்சியில் அளவு பிரச்சினை இருந்தது. போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் அதைப் பற்றி கூறினோம். டி20 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி வீரர்களுடன் பி.சி.சி.ஐ அனுப்பியதால், இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் தனது புதிய ஜெர்சியைப் பெறுவார். அதுவரை அவர் தனது அணி வீரர் ஜெர்சியை அணிந்து விளையாடுவார்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த சீசனில் இருந்து அடிடாஸ் ( Adidas) புதிய கிட் ஸ்பான்சராக இருந்து வருகிறது. அதே நேரத்தில் ட்ரீம் 11 (Dream 11) சமீபத்தில் இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket Sanju Samson India Vs West Indies Suryakumar Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment