IND vs AUS 2nd ODI Tamil News: ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வீசிய 4.4வது ஓவரை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் டிரைவ் அடித்து ஸ்மித் வசம் கேட்ச் ஆனார். அப்போது சூரியகுமார் யாதவ் ஏற்கனவே டிரஸ்ஸிங் அறையில் தனது இருக்கைக்கு வெளியே இருந்தார். ஆட்டமிழந்த ரோகித் 30 யார்டு உள்வட்டத்தை கடப்பதற்கு முன்பே, சூரியகுமார் ஆடுகளத்திற்கு உள்ளே நுழைய தயாராக இருந்தார். ரோகித் விக்கெட் வீழ்த்தப்பட்டதை ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு, மிட்செல் ஸ்டார்க்கை மீண்டும் தனது ரன்-அப் மார்க்கிற்கு வருமாறு கட்டாயப்படுத்தினர் சூரியகுமார்.
அவர் ஆடுகளத்திற்குள் எந்த அளவுக்கு வேகமாக நடந்து வந்தோரோ, அதே வேகத்தில் டிரஸ்ஸிங் ரூம் நோக்கி நடையைக் கட்டி இருந்தார். மும்பையைப் போலவே, ஸ்டார்க் துல்லியமாக வீசிய பந்து சூரியகுமாரை மீண்டும் எல்பிடபிள்யூ ஆக செய்தது. அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், அவருக்கான கூடுதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அரிய வாய்ப்பை தவற விட்டார் சூரியகுமார். இதே ஆட்டத்தை அவர் சென்னையில் நடக்கும் 3வது போட்டியிலும் தொடர்ந்தால், அவருக்குப் பதிலாக மிடில்-ஆடரில் வேறு ஒரு வீரரை தேட தேர்வாளர்கள் நிர்பந்திக்கபபடுவார்கள்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிரடியாக மட்டையைச் சுழற்றும் ஒரு வீரர், ஒருநாள் போட்டிகள் வித்தியாசமாக செயல்பட தவித்து வருகிறார். அவரது முதல் 6 ஒருநாள் போட்டிளில், அவர் ஒரு 40 மற்றும் இரண்டு ஆட்டமிழக்காத 30 ரன்களுடன் இரண்டு ஐம்பது-பிளஸ் ஸ்கோரைப் பெற்றிருந்தார். ஆனால் அதன் பின்னர், தனது கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 9, 8, 4, 34*, 6, 4, 31, 14, 0 மற்றும் 0 என்ற ஸ்கோரைப் பெற்று வீழ்ச்சியை சந்தித்து வருகிறார். ஸ்ரேயாஸ் தொடருக்கு இல்லை என்று உறுதியானபோது, சூரியகுமாருக்கு ஒருநாள் போட்டிகளில் நீட்டிக்கப்பட்ட ஓட்டம் கொடுக்க விரும்பியதால், மாற்று வீரரைக் குறிப்பிட வேண்டாம் என்று இந்தியா அவரையே தேர்வு செய்தது.
டி20 போட்டிகளில் அணியின் முதல் தேர்வாக அவர் இருந்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் அவருக்கும் ஸ்ரேயாசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த இரு வீரர்களில் 4வது இடத்தில் களமாட சரியான வீரர் யார்? என்று வரும் போது, சூரியகுமாரை விட ஸ்ரேயாஸ் தான் முன்னிலையில் உள்ளார். ஆனால், சூரியகுமாரை அணியில் தொடர்ந்து விளையாட வைப்பதற்கும் காரணம் உள்ளது. ஏனெனில், அவரால் மட்டுமே ஆட்டத்தில் உடனடி திருப்புமுனையை ஏற்படுத்த முடியும். அவர் வேகத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் செல்லக்கூடியவராகவும் இருக்கிறார். இருப்பினும், ஷ்ரேயாஸைப் போலல்லாமல், அவரால் ஒரு இன்னிங்ஸைக் கட்டமைக்க முடியும் என்பதை அவர் இன்னும் காட்டவில்லை. அந்த அம்சம் தான் ஒருநாள் போட்டிகளில் முக்கியமாக தேவை.
கேப்டனின் ஆதரவு
சூரியகுமார் தனக்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற அவரிடம் பெரிய ஸ்கோர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அணிக்குள் அத்தகைய இரண்டாவது எண்ணம் எப்போதும் இருந்தது இல்லை. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் ரன் சேர்க்க போராடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை கொடுக்கும் போக்கைக் காட்டியுள்ளனர். மேலும் சூரியகுமாரின் விஷயத்திலும் அது வேறுபட்டதல்ல.
"அவர் வெளிப்படையாக ஒயிட்-பால் கிரிக்கெட்டில் நிறைய திறனை வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயமாக, நாம் பார்த்திருக்கிறோம், மேலும் அவர் விளையாட்டின் நீண்ட வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நான் சொன்னது போல், திறன் உள்ள வீரர்களுக்கு போதுமான ஓட்டம் (போட்டிகள்) வழங்கப்படும், அங்கு அவர்கள் 'குறிப்பிட்ட இடத்தில் எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை' என்று அவர்கள் நினைக்கக்கூடாது. சூரியாவைப் பொறுத்தவரையில், அவருக்கு அந்த நிலையான ஆட்டங்கள் தேவை - ஏழு, எட்டு-பத்து போட்டிகள். அதனால் அவர் தன்னை மிகவும் வசதியாக உணர்ந்து விளையாடுவார்" என்று கேப்டன் ரோகித் கூறியிருந்தார்.
இருப்பினும், இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி 14 போட்டிகளில் 9 போட்டிகளில் சொற்ப ரன்னில் வெளியேறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, ஷ்ரேயாஸ் இருந்தபோது, வங்கதேசத்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளையும், இலங்கைக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளையும் மட்டும் அவர் தவறவிட்டார்.
"இப்போது அவருக்கு ஒரு இடம் (ஆடும் லெவனில்) கிடைத்துள்ளது, யாராவது காயம்பட்டால் அல்லது யாராவது இல்லாதபோது, அது நோக்கத்தைத் தீர்க்காது, ஒரு நிர்வாகமாக நாம் போட்டிகளைப் பார்க்க (படிக்க) முடியும். நீங்கள் தொடர்ந்து போட்டிகளை நடத்தும்போது, 'சரி ரன்கள் வரவில்லை, அவர் வசதியாக இல்லை, அது போன்ற விஷயங்கள்' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் இப்போது நாங்கள் அந்த வழியில் செல்லவில்லை, ”என்று ரோஹித் கூறியிருந்தார்.
இந்திய அணியில் ரஜத் படிதார் போன்ற வீரர்கள் இருந்தாலும், அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சேர்க்கவில்லை. இதேபோல், சஞ்சு சாம்சன் 10 ஒருநாள் போட்டிகளில் 46, 12, 54, 6, 43, 15, 86, 30, 2*, 36, என்று ரன்கள் எடுத்து, 11 போட்டிகளில் 66 என்ற சராசரியை எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முழங்கால் காயம் அவரை நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேற்றியது. சென்னை மண்ணில் சூரியகுமாரின் போராட்டங்கள் தொடர்ந்தால், சஞ்சு சாம்சனை இந்தியா மீண்டும் பார்க்கத் தொடங்கலாம். ஏனெனில் அவரும் பேட்டிங்கில் ஒரு அசாத்திய வீரர் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.