Cricket, Women’s Premier League bidding breaks record of men’s IPL Tamil News -ஐ.பி.எல்-க்கு டஃப் கொடுக்கும் மகளிர் பிரிமியர் லீக்: ரூ 5000 கோடியை நெருங்கிய ஏலம் | Indian Express Tamil

ஐ.பி.எல்-க்கு டஃப் கொடுக்கும் மகளிர் பிரிமியர் லீக்: ரூ 5000 கோடியை நெருங்கிய ஏலம்

மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Cricket, Women’s Premier League bidding breaks record of men’s IPL Tamil News
The WIPL's first season is likely to be held in Mumbai and the BCCI will be having five teams this season. (Twitter/BCCI)

Women’s IPL franchise bids updates in tamil: 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் டி20 தொடர் இந்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த 5 அணிகளின் உரிமையை கைப்பற்றுவதற்கான ஏலம் இன்று நடந்தது. அந்த ஏலத்தின் மொத்த தொகையானது, கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆண்களுக்கான ஐபிஎல் உரிமையாளர்களின் ஏல தொகையை முந்தியது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று நாள். மொத்த ஏலத்தில் ரூ.4669.99 கோடியை நாங்கள் பெற்றுள்ளோம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் நமது பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்திற்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கு வழி வகுக்கிறது. #WIPL மகளிர் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் மற்றும் ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்யும்.” என்று ஜெய் ஷா பதிவிட்டுள்ளார்.

2023 மகளிர் ஐபிஎல் போட்டிக்கான உரிமைகளை வெற்றிகரமாக வாங்கிய ஐந்து அணிகளின் பெயர்களையும், லீக்கை மகளிர் பிரீமியர் லீக் என பெயரிட்டுள்ளதாகவும் பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

அகமதாபாத் – அதானி 1289 கோடி.
மும்பை – மும்பை இந்தியன்ஸ் 912 கோடி.
பெங்களூரூ – ஆர்.சி.பி 901 கோடி.
லக்னோ – காப்ரி குளோபல் 757 கோடி.
டெல்லி – ஜெ.எஸ்.டபிள்யூ 810 கோடி.
சென்னை சூப்பர் கிங்ஸ் மகளிர் அணி உரிமைக்கான ஏலத்தை சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket womens premier league bidding breaks record of mens ipl tamil news