பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உலகக் கோப்பை 2019 தொடர், இன்று(மே 30) தொடங்குகிறது. முதல் நாளான இன்று தொடரை நடத்தும் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் களம் காண்கின்றன.
மேலும் படிக்க - England vs South Africa Live Streaming: ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் மெகா விருந்து
இந்நிலையில், உலகக் கோப்பையில் இங்கிலாந்து கண்டிஷனில் எதிரணி பேட்ஸ்மேன்களின் கண்களில் மரண பயத்தை விதைக்கப் போகும் பவுலர்கள் யார் யார் என்று இங்கு பார்ப்போம்.
ஜஸ்பிரித் பும்ரா
உலகின் நம்பர்.1 பவுலர். அபாயகரமான டெத் பவுலர், அபாயகரமான யார்க்கர்ஸ்களுக்கு சொந்தக்காரர். Belter பிட்சுகளில் கூட Beamer பந்துகளை அனாயசமாக வீசக் கூடியவர். ஸ்லோ விக்கெட்டுகளில் கூட Brace(அடுத்தடுத்து 2 விக்கெட்ஸ்) செய்யக் கூடியவர். 145+ கி.மீ. வேகமானாலும் சரி, 135+ கி.மீ. வேகமானாலும் சரி, இவரது லைன் அன்ட் லென்த்தின் குறி பெரும்பாலும் தப்பியதில்லை. குறிப்பாக, இவரது டெத் யார்க்கர்ஸ் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களையும் அச்சமடைய வைப்பதால், ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் கிரிக்கெட்டர்கள் தொடங்கி இந்நாள் கிரிக்கெட்டர்ஸ் வரை அனைவரும் பும்ராவின் லீகல் டெலிவரியை காண காத்திருக்கிறார்கள்.
மிட்சல் ஸ்டார்க்
மாடர்ன் கிரிக்கெட் உலகின் மற்றொரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் மிட்சல் ஸ்டார்க். இவரது ஃபேஸில் உள்ள வேகம், வலது கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, இடது கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, நிச்சயம் அவர்களின் ஈகோவை டச் செய்து பார்க்கும். பும்ராவை போல, டெத் ஓவர்களில் இவரது யார்க்கர், ஸ்டெம்ப்புகளை பல மீட்டர் தூரத்திற்கு பறக்க விடும் என்பதால், பேட்ஸ்மேன்கள் வெறுக்கும் பவுலராகவே வலம் வருகிறார். ஆனால், சமீப காலத்தில் இவரது ஃபார்ம் ஆஸி., நிர்வாகத்தை கொஞ்சம் கவலையடைய வைத்திருந்தாலும், உலகக் கோப்பையை முன்னிட்டு இவரது நெட் பிராக்டிஸில் அனல் பறக்கிறது. சக வீரர் பேட் கம்மின்ஸுடன் மிட்சல் ஸ்டார்க், எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டவுள்ள அந்த தருணத்திற்கு என்ற தனி ரசிகர்கள் பட்டாளமே காத்திருக்கிறது.
டிரெண்ட் போல்ட்
தனது ஃபார்ம் என்னவென்பதை இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலேயே சாம்பிள் காட்டிவிட்டார் டிரெண்ட் போல்ட். இந்தியாவின் அபாயகரமான ஓப்பனர்ஸ் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் 'சும்மா இந்த பக்கம் சுத்திப் பார்க்க வந்தோம் பிரதர்'-னு சொல்லும் அளவுக்கு அவர்களை அனாயசமாக அவுட் செய்தார். ஆப்கன் தொடங்கி ஆஸ்திரேலியா வரை டிரெண்ட் போல்ட் அனைத்து அணிகளுக்கும் கடும் சவால் அளிக்க தயாராக உள்ளார்.
முகமது ஆமிர்
கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றவர் முகமது ஆமிர். இங்கிலாந்து கண்டிஷனில் இவரது பவுலிங் ரெக்கார்ட் அபாரமாக உள்ளது. அதுவும், புது பந்தில் இவர் செய்யும் மாயஜாலம் என்னவென்பதை, இங்கிலாந்தில் நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா பார்த்தது. உலகமும் பார்த்தது.
ஜோஃப்ரா ஆர்ச்சர்
'இங்கிலாந்து அணியின் "X Factor" இவர் தான்' என்று இந்திய கேப்டன் விராட் கோலியே வெளிப்படையாக ஒப்புக் கொண்டு கொடுத்த ஸ்டேட்மென்ட்டுக்கு சொந்தக்காரர் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர். ஐபிஎல் 2019 தொடரில், இவரது ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் பார்த்த இங்கிலாந்து நிர்வாகம், உலகக் கோப்பையில் இவரை சேர்க்கலாமா வேண்டாமா என்று தீவிரமாக யோசித்தது. ஏற்கனவே டீமை ரெடி செய்துவிட்டதால், யாரை நீக்கிவிட்டு இவரை சேர்க்கலாம் என யோசிக்க, அதற்குள்ளாகவே மற்றொரு ஆல் ரவுண்டர் டேவிட் வில்லே 'உலகக் கோப்பையில் எனது வாய்ப்பு கிடைக்காமல் போனால் அதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் காரணம்' என்று பதட்டப்பட அவரது வார்த்தைகளை உண்மையாக்கியது இங்கிலாந்து வாரியம்.
கணிக்க முடியாத பவுன்சர் இவரது அசுர பலம். ஐபிஎல்-ல் இவரது ஓவரில் தோனி ஹெல்மெட்டில் வாங்கிய அடியை நாம் மறந்திருக்க முடியாது. பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங் + துடிப்பான ஃபீல்டிங் என்று இங்கிலாந்தின் லோ ஆர்டரை மிக பிரம்மாண்டமாக வலிமைப்படுத்தக் காத்திருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.