முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், உலகக் கோப்பை தொடர் குறித்தும், இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல தகவல்கள் குறித்தும் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் அலசி வருகிறார்.
அதன் மூன்றாம் பாகம் இங்கே....
மூணு ஃபாஸ்ட் பவுலர்கள் போதுமா?
எனக்கு தெரிஞ்சு இங்கிலாந்துல ஒரு ஸ்பின்-னோட தான் கோலி ஆடுவாரு. அதுக்கும் அதிகமா ஸ்பின்னோட அங்க ஆடுறதுக்கான வாய்ப்பு இல்ல.. ஸோ, அந்த ஸ்பின்னர் சாஹல்லா, குல்தீப்பா, ஜடேஜாவா..? சப்போஸ் ஜடேஜா ஆடலன்னு வைங்க, அவருக்கு பதில் சாஹல் ஆடுறாருனா, இன்னும் மிடில் ஆர்டர் வீக் ஆகிடும். இது எல்லாமே ஒரு சேலஞ். ஸோ, தொடக்கத்தில் கோலி ஜடேஜாவுக்கு போக தான் வாய்ப்பிருக்கு. ஏன்னா, லோ மிடில் ஆர்டர்-ஐ Strengthen பண்ணனும்-னு நினைச்சாருன்னா ஜடேஜாவுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, சாஹலுக்கு அடுத்தபடியா இந்தியாவின் இரண்டாவது ஸ்பின்னர். எல்லா கேப்டனும் லெக் ஸ்பின்னர்ஸ் விரும்புவாங்க. ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்-ஸால ஓரளவுக்கு இங்கிலாந்துல சக்சஸ் கொண்டுவர முடியும். ரவீந்திர ஜடேஜா ரெகுலரா டீமுல இருக்க கூடிய பிளேயர். ஃபீல்டிங்கும் அவரது அட்வான்டேஜ். பேட்டிங்கும் இப்போ நல்லா பண்றாரு. குல்தீப் யாதவ் இல்லாம, வேற யாராச்சும் ஸ்பின்னர் இருந்திருந்தா, நிச்சயம் அந்த ஸ்பின்னருக்கு பதிலாக Fourth ஃபாஸ்ட் பவுலருக்கு போயிருப்பார். குல்தீப் ஒருமாதிரி Unorthodox பவுலர். தென்னாப்பிரிக்காவின் Paul Adams மாதிரி. Unorthodox-ங்கற Capability இருப்பதால, கோலி அவரை 3வது ஸ்பின்னரா டீமுல எடுத்திருக்காரு.
ஒரு வேளை இவர் க்ளிக் ஆகலாம். இவரது பவுலிங்கை எதிரணி Predict பண்ண தடுமாறலாம். இதே, குல்தீப் யாதவ் என்பவர் Scene-ல யே இல்லனா, அந்த இடத்துல கண்டிப்பா ஒரு ஃபாஸ்ட் பவுலர் வந்திருப்பார். 'ஒருவேளை இவர் சக்சஸ் ஆகிடமாட்டாரா, Weapon-ah இருக்கமாட்டாரா?' என்ற எண்ணத்தில் தான் அவரை கொண்டு வந்திருக்கணும். கோலி ஒரு சான்ஸ் எடுத்திருக்காரு Googly மாதிரி. அந்த Googly சக்சஸ் ஆகுதா இல்லையானு இனிமே தான் பார்க்கணும்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்...
இன்னைக்கு Running Mid wicket-ல Quickest-னா அது மகேந்திர சிங் தோனி மட்டும் தான். அவரு எவ்ளோ ஃபிட்டா இருக்குறாரு என்பதற்கு அதுவே ஒரு உதாரணம். Batting-ல அவரது Deliverance ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஆனா, ஒரு Tag இருக்கு இல்லையா... அந்த tag பார்த்து மற்ற சைட் பிரஷர் ஆவாங்க. மூணு மேட்ச் அடிக்கலனாலும், நாலாவது மேட்ச் அவர் களமிறங்கும் போது தோனி, தோனி-னு மைன்ட்-ல வச்சு தான் பவுலிங் பண்ணுவாங்க. அவர் Out Of Form-ங்கறது-லாம் செகண்ட். ஃபார்முக்கு வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. அப்படி வந்தா அது மிரட்டலான பார்மா இருக்கும். தோனி-ங்கற Tag-ah அவர் Utilize பண்ணனும்.
விராட் கோலியும் எதிர்பார்க்குற விஷயம் தோனியோட Contribution.
தோனி கேப்டன்ஷிப்-ல விராட் கோலி மாஞ்சி மாஞ்சி அடிச்சாரு. ஒவ்வொரு மேட்சும் நூறு..நூறு..நூறு-னு அடிச்சாரு. அப்படி அடிக்கும் போது கேப்டனுக்கு பிரஷர் இருக்காது. இப்போ, விராட் கோலிக்கு அந்த பிரஷரை கம்மி பண்ண தோனி அதை திருப்பி செய்யனும். நம்மளும் தோனி இனி அடுத்த வேர்ல்டு கப்புல பார்ப்போமா-ங்கறது சந்தேகம். ஸோ, அவருக்கே அந்த மோட்டிவேஷன் இருக்கும். ஒரு Memorable World Cup-ah இத பண்ணிட்டு, ஒரு ஹை லெவல்ல போனும்-னு நினைப்பாரு.
இப்போ தோனி அதை கோலிக்கு திருப்பி செய்ய வேண்டிய நிலையில் இருக்காரு. கண்டிப்பா, விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தோனி கண்சிஸ்டன்ட்டா ஆடணும். அடுத்த உலகக் கோப்பையில் தோனி ஆடுறதுக்கு வாய்ப்பில்லை... ஸோ, அவரோட கடைசி உலகக் கோப்பையா இது இருக்கும் பட்சத்தில் அவர் மறக்க முடியாத அளவுக்கு ஆடிட்டு போகணும்.
கடைசியா ஒன்னு சொல்ல விரும்புறேன்...
எப்போதும் ஃபாஸ்ட் பவுலர்ஸ் எண்ணுகிற ஒரு விஷயம், இங்கிலாந்து டூர் வராதா, ஆஸ்திரேலியா டூர் வராதா, நியூசிலாந்து டூர் வராதா என்பது தான். ஆஸ்திரேலியாவோட Bowling தரம் ஏன் அவ்ளோ High-ah இருந்துச்சுனா, அங்க domestic cricket-la பவுலிங் போடுறவன் கில்கிரிஸ்ட்டுக்கும், ரிக்கி பாண்டிங்கிற்கும் பவுலிங் போட்டு தான் சச்சினுக்கு பவுலிங் போட வரான். ஸோ, ஆல்ரெடி வேர்ல்டு கிளாஸ் பேட்ஸ்மேனுக்கு போட்டுட்டான். அவன் மனசுக்குள்ள, 'போன வாரம் தான் நாம பாண்டிங்குக்கு பவுலிங் போட்டோம்'-ங்கற எண்ணம் இருக்கும். ஏன்னா, அவங்களாம், ரெகுலரா டொமஸ்டிக் கிரிக்கெட் ஆடினாங்க. ஆஸ்திரேலியா சிஸ்டமே அப்படித்தான்.
ஆனா, இங்க இருக்குற டொமஸ்டிக் பவுலர்ஸ், விராட் கோலிக்கு பவுலிங் பண்ண போறதுல்ல, ரோஹித் ஷர்மாவுக்கு பவுலிங் பண்ண போறதுல்ல, சச்சினுக்கு பவுலிங் பண்ண போறதுல்ல. அவன் லோக்கல் பிளேயர்ஸ்க்கு தான் போட்டுட்டு இருக்கான். அவனை இந்தியாவுக்கு செலக்ட் பண்ணி வச்சிட்டு, நேரா கொண்டு போய் டேவிட் வார்னருக்கு போடச் சொன்னா, 'ஆஹா... இந்த மாதிரி ஒரு பேட்ஸ்மேனுக்கு நான் போட்டதில்லையே'-னு நினைப்பான். ஸோ. அங்க அவன் க்ளிக் ஆவானா, மாட்டானா என்பது நமக்கு தெரியாது. ஸோ, பவுலர்ஸ் தரம் உயரனும்-னா, டாப் பேட்ஸ்மேன்ஸ் Domestic Cricket-ல ஆடணும். அப்போ தான் அவனுக்கு Exposure கிடைக்கும். ஆட்டோமேட்டிக்கா அந்த மனநிலை டேவிட் வார்னர் கிட்ட எதிரொலிக்கும். அந்த வகையில் ஐபிஎல் பெரிய Exposure கொடுத்தது.
உலகக் கோப்பையில் நாம ஜெயிக்கணும்-னா 'ஜெய் சடகோபன் ரமேஷ்'-னு மந்திரம் சொல்லியாகனும் (சிரித்துக் கொண்டே).... இவர் தான் அடிக்கணும், இவர் தான் விக்கெட் எடுக்கணும்-னு காத்திருக்காம, ஒவ்வொருத்தரும் தங்களது Best Individual திறமையை வெளிக் கொண்டுவந்து ஆடுனா, இந்த வேர்ல்டு கப் நமக்கு தான்!.
உலகக் கோப்பை தொடர் பற்றிய சடகோபன் ரமேஷின் Preview, பகுதி - 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.