Advertisment

'Permutation Combination போட்டீங்கனா டாப் 2 ஓப்பனர்ஸ் ரோஹித் - தவான் மட்டுமே' - சடகோபன் ரமேஷ் #IETAMIL Exclusive

இந்தியாவுக்கு ஆடும் போது, உங்க Mind Set, Motivation எல்லாமே மாறும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
cricket world cup 2019 sadagoppan ramesh preview indian cricket team - CWC 2019

cricket world cup 2019 sadagoppan ramesh preview indian cricket team - CWC 2019

உலகக் கோப்பை 2019 தொடர் குறித்து முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு பகிர்ந்து கொண்டவை, பகுதி 2...

Advertisment

ரோஹித் -தவான் ஐபிஎல்-ல, வார்ம் அப் மேட்சஸ்-ல நல்லா அடிக்கலன்னு சொல்றாங்க. பயிற்சிப் போட்டிகள்ல கோலி கூட தான் நல்லா பெர்ஃபார்ம் பண்ணல... அப்போ கோலி அடிக்காம போகப் போறாரா? எப்போதும் இந்த கம்பேரிசன் பண்ணவே கூடாது. வார்ம் அப்-ல சம் டைம்ஸ் பயங்கரமா ரன் அடிக்கிறவங்க டோர்னமென்ட்-ல அடிக்க மாட்டாங்க. வார்ம் அப்-ல ஃபிளாப் ஆகுறவங்க முக்கியமான மேட்சஸ்ல ரன் அடிப்பாங்க. என்னன்னா, Warm up ஒரு பிராக்டீஸ் மேட்ச் மாதிரி. அதுல அடிச்சீங்கனா கான்ஃபிடன்ட்டா மேட்சுக்கு போகலாம். அதுதானே தவிர, Permutation Combination போட்டீங்க-னா இந்தியாவோட டாப் 2 ஓப்பனர்ஸ் யாருன்னா ரோஹித்தும் - தவானும் தான் வந்தாகணும். அந்த லெப்ட் ரைட் காம்பினேஷன் நமக்கு நிறைய டைம்ல ரொம்பவே உதவியா இருந்திருக்கு.

லெஃப் அன்ட் ரைட் காம்பினேஷன் ரொம்ப முக்கியம்-னு ஏன் திரும்ப திரும்ப சொல்றேன்னா, அப்போ தான் Bowlers செட்டில் ஆகுறதுக்கு கொஞ்சம் கஷ்டப்படுவாங்க. லெப்ட், ரைட்னு அந்த லைன்ன அட்ஜஸ்ட் பண்ணி போடுறதுல, அவங்களுக்கு பெரிய Challenge இருக்கும். இதுனால, ஜாஸ்தி Loose Balls கிடைக்கும். அந்த லூஸ் பால்ஸ்-ஸ கன்வெர்ட் பண்ணி நாம ஸ்கோர் அடிக்கணும். ஸோ, மூணு நாலு மேட்சுக்கு ரோஹித் - தவான் ஓப்பனிங்-கை கோலி 'டச்' பண்ணவே மாட்டார். அதுல நாலு மேட்ச் தொடர்ந்து ஃபெயில் ஆனாதான், கோலி செகண்ட் ஆப்ஷனுக்கு போவாரு. மத்தபடி இது ஒரு நல்ல காம்பினேஷன் தான்.

ரெண்டாவதுங்க, ஐபிஎல் ஸ்கோரை எப்போதும் நாம பெரிதாக கன்ஸிடர் பண்ணத் தேவையில்ல.. ஐபிஎல்-ல அடிக்குறவங்க-லாம் இன்டர்நேஷனல் மேட்சுல அடிச்சுருவாங்க-னு எதிர்பார்க்க முடியாது. அதுமாதிரி ஐபிஎல்-ல ஃபிளாப் ஆகுறவங்களும், வேர்ல்டு கப்புலயும் ஃபிளாப் ஆவாங்கனு சொல்ல முடியாது. இந்தியாவுக்கு ஆடும் போது, உங்க Mind Set, Motivation எல்லாமே மாறும். உங்களோட Over all Perception எல்லாமே திடீர்-னு மாறும். பட், என்னோட தனிப்பட்ட அபிப்ராயம் என்னன்னா... ரோஹித் ஒரு மேட்சுல மட்டும் 170 அடிக்குறதுக்கு பதிலா, ஸ்பிலிட் பண்ணி அடிச்சாருன்னா ரொம்ப நல்லா இருக்கும்.

பட், ஒரு விஷயம் உண்மை.

கபில் தேவுக்கு அடுத்து இந்தியாவுக்குன்னு ஒரு சிறந்த ஆல் ரவுண்டரை இன்னமும் தேடிக்கிட்டு தான் இருக்கோம். அதுக்கப்புறம் நடந்த எந்தவொரு வேர்ல்டு கப்புலயும் நம்மால இன்னொரு கபில் தேவ பார்க்க முடில. சச்சினுக்கு அப்புறம் யாரு யாரு-னு கேட்டோம்... விராட் கோலி வந்தாரு. கபில் தேவ் நமக்கு வேர்ல்டு கப் வின் பண்ணி தந்தாரு. அதுக்கப்புறம் யாருன்னா தோனி வந்தாரு. இதுக்குலாம் Replacement கிடைச்சதே தவிர, ஆல் ரவுண்டர் கேட்டகரியில கபில் தேவுக்கு இணையான ஒரு ஆல் ரவுண்டர் இல்லை. இருந்தாலும், அதையும் தாண்டி தான் ஒரு நல்ல இந்தியன் டீமை தான் இப்போ செலக்ட் பண்ணியிருக்காங்க.

கேதர் ஜாதவை நீங்க Utilize பண்ணலாம். ஆஃப் ஸ்பின் போடுறாரு. ஒன்னு அல்லது ரெண்டு விக்கெட்ஸ் எடுத்து, பேட்டிங்குல கடைசி 5 ஓவர் அவரை யூஸ் பண்ணக்கூடிய Capability அவர்கிட்ட இருக்கு. மத்தபடி தினேஷ் கார்த்திக்கை நிச்சயம் எடுக்கணும்-னு எதிர்பார்த்தேன். அது நடந்துச்சு. ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் பேட்ஸ்மேன். பட், அவருக்கு எந்தளவுக்கு வாய்ப்பு கிடைக்கும்-ங்கறத பொறுத்திருந்து தான் பார்க்கணும். விஜய் ஷங்கரும் சமீபத்தில் நல்லா பண்ணி இருந்தாரு. அவருக்கும் வாய்ப்பு கொடுத்து இருக்காங்க.

லோகேஷ் ராகுலா, அம்பதி ராயுடு-வா என்பதுல தான் ஒரு இழுவை இருந்தது. ராகுல் ஏற்கனவே அதிரடியா ஆடி ரெண்டு மூணு இன்னிங்ஸ்-ல தன்ன ப்ரூவ் பண்ணதுனால அவரை செலக்ட் பண்ணி இருக்காங்க-னு நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சு ஓவராலா இது ஒரு பெஸ்ட் டீம். இதை வச்சி எந்தளவுக்கு ஃபைட் பண்றோம்-ங்கறத தான் பார்க்கணும்.

இந்தியாக்குள்ள செலக்ட் பண்ணக்கூடிய ஒரு தரமான டீம் இது.

பட், இது எல்லாத்தையும் தாண்டி பெரிய Disappointment என்னன்னா,

ரிஷப் பண்ட் மாதிரி ஒரு பிளேயரை நீங்க எடுத்து இருந்தீங்கனா, ஒரு எக்ஸ்ட்ரா Left Hander நமக்கு கிடைச்சி இருப்பாங்க. இப்போ டீமுல, லெஃப்ட் ஹேண்டர்-னு பார்த்தீங்கனா ஷிகர் தவான். ஷிகர் தவானுக்கு அடுத்து ஜடேஜா தான் வர்றாரு. ஸோ, அந்த இடைவேளை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. இதுனால என்ன பிரச்சனை-னா லெஃப் - ரைட் காம்பினேஷனை நாம் அதிகம் maintain பண்ண முடியாம போகும்.

நம்பர்.4 ஸ்லாட் தான் நமக்கு மிக மிக Crucial-ஆ இருக்கு.நம்பர் 1 ரோஹித், நம்பர் 2 தவான், நம்பர் 3 விராட் கோலி, நம்பர் 5ல நீங்க தோனிய கூட ஆட வைக்கலாம். ஆனால், நம்பர் 4-ல யாரை இறங்க வைக்கப் போறாங்க-ங்கறது தான் பெரிய கேள்வி. லோகேஷ் ராகுலை அங்க இறக்க தான் அதிகம் வாய்ப்பிருக்கு. ஆனா, நான் ராயுடு-னு யோசிச்சு பார்த்தேன். ராயுடு இந்த ஐபிஎல்-ல சிறப்பா பெர்ஃபாம் பண்ணலனாலும், ஓவராலா அவர் ஐபிஎல் தொடர்கள்ல கண்சிஸ்டன்ட்டா பெர்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் இருக்காரு. அட்லீஸ்ட், அணியில் ஒரு இடமாவது கிடைக்கும்-னு நான் எதிர்பார்த்தேன். பட், எதிர்பார்த்தைதைவிட சர்ப்ரைசிங்கான டீம் செலக்ஷன் இல்லை. மேக்ஸிமம் எதிர்பார்த்த டீம் தான்.

ராயுடுவா, ராகுலா என்பதிலும் பெரும் குழப்பம் இருதுச்சு. இரண்டு பேரும் பெர்ஃபாம் பண்ணாலும் நான் ரசிப்பேன். ஆனா, ராகுல் ஓப்பனரா தான் மைன்ட்-ல இருக்காரு. நம்பர்.4-ஆ ராயுடு இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்குமோ-தோனுச்சு. பட், வார்ம் அப் மேட்சுல ராகுல் செஞ்சுரி அடிச்சிருக்காரு. ஆனால், அதை ரியல் மேட்சுல கன்வெர்ட் பண்ணியாகணும்.

அதே மாதிரி ரிஷப் பண்ட்டா, தினேஷ் கார்த்திக்கா-ங்கற கேள்வி இருந்தது. தினேஷ் கார்த்திக்கோட எக்ஸ்பீரியன்ஸுக்குன்னு ஒரு வேல்யூ இருக்கு. அது மட்டுமில்ல, அவர் அற்புதமான ஃபினிஷரும் கூட. ஃபீல்டிங்கும் நல்லா பண்ணுவாரு, கீப்பிங்கும் பண்ணுவாரு. நம்ம ஊரு ஆளு வேற... அவரை செலக்ட் செய்தது மகிழ்ச்சியே!.

ஆல் ரவுண்டர் தோனி

அந்த காலத்துல பவுலிங் + ஃபீல்டிங் பண்றவங்கள தான் ஆல் ரவுண்டர்-னு சொல்வாங்க. ஆனால், கில்கிறிஸ்ட் அத டோட்டலா மாத்தி விட்டாரு. கீப்பிங் + பேட்டிங் பண்றவங்களும் ஆல் ரவுண்டர் தான்னு நிரூபிச்சாரு. ஸோ, தோனி-ய இந்த வேர்ல்டு கப்புல மிகப் பெரிய ஆல் ரவுண்டரா நாம பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். மேட்சுல தோனி எந்த இடத்துல இறங்கப் போறார்...? 30 ஓவர்ல தான் தோனி இறங்கனும். அப்போதான் 30-40 ஓவர் வரை அவர் செட்டில் ஆகி, 40 ஓவருக்கு மேல அடிக்க ஆரம்பிப்பாரு. ஹர்திக் பாண்ட்யா-னா 43 ஓவர்ல தான் இறங்கனும். அப்போதான் கடைசி 7 ஓவர்ல அவரோட Nature Game-ah ஆட முடியும். இதுக்கு டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் சிறப்பா விளையாட வேண்டியது ரொம்ப அவசியம்.

விராட் கோலிய சப்போர்ட் பண்ணி தான் எல்லோருமே ஆடணும். ஏன்னா, அவரோட பெர்ஃபாமன்ஸ யாரும் மேட்ச் பண்ண முடியாது. அவரோட Skill Level-ah யாரும் மேட்ச் பண்ண முடியாது. ஸோ, விராட் கோலியை சுற்றி எல்லோரும் பெர்ஃபார்ம் பண்ணனும்.

அப்படி இல்லனா, ரோஹித் ஷர்மா.

இவங்க ரெண்டு பேர் மட்டும் தான் Tall Score அடிக்கக் கூடிய Batsman. 100, 150 அடிக்கக் கூடிய Capacity உள்ள பேட்ஸ்மேன். ஸோ, இவங்கள சுற்றியே எல்லோரும் சப்போர்ட் பண்ணி பெர்ஃபார்ம் பண்ணனும். இவங்க ரெண்டு பேருல யாராச்சும் ஒருத்தர் பில்லர் மாதிரி நின்னாங்க-ன வீக்கா இருக்குறதா நாம நினைக்குற மிடில் ஆர்டர் நிச்சயம் சிறப்பாக சப்போர்ட் பண்ணும்.

ஹர்திக்கை 40-5 ங்கற ஸ்டேஜில இறக்கி விட்டீங்கனா, 'நாம சிக்ஸ் அடிக்கனுமா? டிபன்ஸ் ஆடணுமா..?'ன்னு அவர் கன்ஃபியூஸ் ஆகிடுவாரு. அவர் கேம் அந்த மாதிரி கிடையாது.Situation-க்கு ஏற்ற மாதிரி ஓரளவுக்கு தான் ஆட முடியும். லூஸ் பால் கிடைச்சா சிக்ஸ் அடிக்க தான் நினைப்பாரு.

தொடரும்....

(உலகக் கோப்பையை ஜெயிக்க இந்தியா உச்சரிக்க வேண்டியம் மந்திரம் என்ன?, இந்தியாவுக்கு 3 ஃபாஸ்ட் பவுலர்கள் போதுமா?, விராட் கோலிக்கு தோனி செய்து தர வேண்டிய கடமை என்ன? போன்ற பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்த சடகோபன் ரமேஷின் கருத்துகள் அடுத்த பாகத்தில்...)

மேலும் படிக்க - இந்திய அணியின் பலம் - பலவீனம் பற்றி டெக்னிக்கலாக அலசும் சடகோபன் ரமேஷ், #IETAMILExclusive

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment