Advertisment

வெளியேறிய ஜிம்பாப்வே: ஒரு இடத்துக்கு மல்லுக்கட்டும் 2 அணிகள்… சூடுபிடிக்கும் உலகக் கோப்பை தகுதி சுற்று!

சூப்பர் 6 சுற்றில் இருந்து ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இலங்கை பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket World Cup 2023: Super Six scenarios for Scotland - Netherland Tamil News

ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நெதர்லாந்து வெற்றி பெற்றால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சமநிலை இருக்கும்.

ICC Men's Cricket World Cup 2023 Tamil News: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. லீக் முடிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த 6 அணிகள் தற்போது மோதி வருகின்றன. இந்த சூப்பர் 6 சுற்றி முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மேலும், இந்தியாவில் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

Advertisment

ஜிம்பாப்வே வெளியேற்றம்

இந்நிலையில், சூப்பர் 6 சுற்றில் இருந்து ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக வெளியேறியுள்ளது. இதேபோல், ஓமன் அணியும் வெளியேறியுள்ளது.

இந்த நிலையில், புலவாயோவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 234 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 235 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 41.1 ஓவர்களில் 203 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்த ஸ்காட்லாந்து அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. அதே சமயம் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு இது 2-வது தோல்வியாகும். இதன் மூலம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வேக்கு, உலகக் கோப்பை போட்டிக்கு செல்லும் கனவும் கலைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக அந்த அணி உலகக் கோப்பை வாய்ப்பை தவற விடுகிறது.

முக்கிய போட்டி

ஜிம்பாப்வே அணி 6 புள்ளி பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் (-0.099) ஸ்காட்லாந்தை (6 புள்ளி, ரன்-ரேட் +0.296) விட பின்தங்கி இருப்பதால் இனி வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. ஸ்காட்லாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி, 2ல் தோல்வி என 6 புள்ளிகளுடனும், +0.296 நெட் ரன்ரேட்டுடனும் புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

மறுபுறம், நெதர்லாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி, 2ல் தோல்வி என 4 புள்ளிகளுடனும், -0.042 நெட் ரன்ரேட்டுடனும் புள்ளிகள் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் கடைசி சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக நெதர்லாந்து வெற்றி பெற்றால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அதனால், இறுதிப்போட்டியை எட்டுவது யார்? என்பதை நெட் ரன்ரேட் தான் முடிவு செய்யும். இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மோசமான தோல்வியை தழுவாமல் இருந்தாலே இறுதிப்போட்டிக்குள் எளிதில் நுழைய முடியும்.

இன்றைய போட்டி

சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் ஓமன் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் (பகல் 12.30 மணி) மோதுகின்றன. இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகள் இடையிலான மோதல் தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Worldcup Scotland Netharlands Zimbabwe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment