Advertisment

உலகக் கோப்பைக்கு இலங்கை தகுதி… மீதமுள்ள ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டா போட்டி!

சூப்பர் 6 சுற்றில் இருந்து ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket World Cup 2023: Super Six scenarios, Which teams can qualify Tamil News

இந்த 3 அணிகளில் தகுதி பெறும் அணி இலங்கை அணியுடன் உலகக் கோப்பை அணிகள் பட்டியலில் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும்.

Super Six scenarios; Which teams can qualify for the Cricket World Cup 2023 Tamil News: 13வது ஒருநாள் உலகக்கோப்பை 2023 (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது.

Advertisment

தகுதி சுற்று - சூப்பர் 6 போட்டிகள்

இந்த தகுதி சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் நிலையில், அதில் 10 அணிகள் கலந்துகொண்டன. இந்த 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட நிலையில், இரு பிரிவுகளிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. அவ்வகையில், 'ஏ' பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், 'பி' பிரிவில் இருந்து ஓமன், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் சூப்பர் 6 சுற்றில் களமாடி வருகின்றன.

வரலாற்றில் முதல்முறை

publive-image

சூப்பர் 6 சுற்றில் இருந்து ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக வெளியேறியுள்ளது. இதேபோல், ஓமன் அணியும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

publive-image

ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி

இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இலங்கை அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள ஒரு இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டா போட்டி நடக்கிறது. இந்த 3 அணிகளில் தகுதி பெறும் அணி இலங்கை அணியுடன் பட்டியலில் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும். மேலும், நடந்து வரும் தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக களமாடும்.

publive-image

எந்த அணிக்கு வாய்ப்பு?

உலகக்கோப்பை தகுதிச்சுற்று புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரை, இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே அணி 3ல் வெற்றி 1ல் தோல்வி என 6 புள்ளிகள் மற்றும் +0.030 நெட் ரன்ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் ஆடியுள்ள ஸ்காட்லாந்து 2ல் வெற்றி, 1ல் தோல்வி என 4 புள்ளிகள் மற்றும் +0.188 நெட் ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள நெதர்லாந்து 2ல் வெற்றி, 2ல் தோல்வி என 4 புள்ளிகள் மற்றும் -0.042 நெட் ரன்ரேட்டுடன் 4வது இடத்தில் உள்ளது.

இந்த அணிகளில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு போட்டிகள் மீதமுள்ளன. அதேவேளையில், ஸ்காட்லாந்து அணிக்கு மட்டும் 2 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணியின் நெட் ரன்ரேட் ஜிம்பாப்வே அணியை விட கூடுதலாகவும் உள்ளது. எனவே, ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும்.

publive-image

ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று: சூப்பர் 6 சுற்று போட்டி அட்டவணை - முடிவுகள்:

ஜூன் 29 - ஜிம்பாப்வே vs ஓமன் - ஜிம்பாப்வே 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஜூன் 30 - நெதர்லாந்து vs இலங்கை - இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஜூலை 1 - வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து - இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஜூலை 2 - ஜிம்பாப்வே vs இலங்கை - இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஜூலை 3 - நெதர்லாந்து vs ஓமன் - நெதர்லாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (DLS முறை)
ஜூலை 4 - ஜிம்பாப்வே vs ஸ்காட்லாந்து
ஜூலை 5 - வெஸ்ட் இண்டீஸ் vs ஓமன்
ஜூலை 6 - நெதர்லாந்து vs ஸ்காட்லாந்து
ஜூலை 7 - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
ஜூலை 9 - இறுதிப்போட்டி.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports West Indies Scotland India Worldcup Srilanka Zimbabwe Netharlands
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment