2023 Cricket World Cup Tamil News: சர்வாதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. இத்தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 19 அன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிக்காக, சுமார் 12 மைதானங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசலா, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை. ஆகிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 46 நாட்கள் நடக்கவிருக்கும் தொடரில் 48 போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி வருமா?
பொதுவாக, ஐசிசி உலகக் கோப்பை அட்டவணையை குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கும். ஆனால் இந்த முறை பிசிசிஐ இந்திய அரசிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற காத்திருக்கிறது. இதில் இரண்டு முக்கிய சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று, போட்டிக்கான வரி விலக்கு பெறுதல். மற்றொன்று, 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஐசிசி நிகழ்வுகளைத் தவிர இந்தியாவில் விளையாடாத பாகிஸ்தான் அணிக்கான விசா அனுமதி.
இருப்பினும், கடந்த வார இறுதியில் துபாயில் நடைபெற்ற ஐசிசியின் காலாண்டுக் கூட்டத்தில், பாகிஸ்தான் அணிக்கான விசாக்கள் இந்திய அரசால் அனுமதிக்கப்படும் என்று பிசிசிஐ உறுதியளித்ததாக அறியப்படுகிறது.
963 கோடி வரி செலுத்தும் பிசிசிஐ
2023 உலகக் கோப்பைக்கு ஐசிசி சார்பில் பிசிசிஐ 963 கோடி வரி செலுத்த உள்ளது. 2023 உலகக் கோப்பையின் ஒளிபரப்பு வருவாயில் 20% வரி ஆர்டர் (அதிகக் கட்டணம் தவிர்த்து) வசூலிக்கப்படும் என்று இந்திய வருமான வரித்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஐசிசிக்கு தெரிவிக்கப்பட்டது.
பிசிசிஐ 2023 உலகக் கோப்பையிலிருந்து ஐசிசியின் மதிப்பிடப்பட்ட ஒளிபரப்பு வருமானத்தை 533.29 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பட்டியலிட்டுள்ளது. 10.92% வரி ஆர்டருக்கான "நிதிப் பாதிப்பு" சுமார் 58.23 மில்லியன் டாலர்கள் ஆகும் (பிசிசிஐ 52.23 மில்லியன் என பட்டியலிடப்பட்டுள்ளது. இது பட்டியலிடப்பட்ட சதவீதங்களின் அடிப்படையில் பிழையாகத் தெரிகிறது). வருமான வரித்துறை அதிகாரிகள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், மொத்த வரி 21.84% ஆக உயர்த்தப்பட்டால் அது சுமார் 116.47 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். அதாவது முந்தைய கணிப்பை விட அது இருமடங்காக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.