/indian-express-tamil/media/media_files/nowRmCnemGm2wdx0HxKA.jpg)
இலங்கை கிரிக்கெட்டை ஜெய்ஷா நடத்துகிறார் - அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டு
பி.சி.சி-ஐக்கு அடிபணியும் சூழ்நிலையை இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உருவாக்கிவிட்டதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Cricket World Cup: Jay Shah is running Sri Lanka Cricket, says Arjuna Ranatunga
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட்டை நாசப்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளர் ஜெய்ஷா-வை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா கடுமையாக சாடியுள்ளார்.
“இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் ஜெய்ஷாவிற்கும் இடையிலான தொடர்பு காரணமாக அவர்கள் (பி.சி.சி.ஐ) இலங்கை கிரிக்கெட்டை அழுத்தி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்” என்று அர்ஜுன ரணதுங்கா கூறியதாக இலங்கை செய்தித்தாள் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
“ஜெய்ஷா இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார். ஜெய்ஷாவின் அழுத்தத்தால் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார்” என்று இலங்கையின் 1996 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் அர்ஜுன ரனதுங்கா கூறினார்.
“அவரது தந்தை இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால் ஜெய்ஷா மட்டுமே சக்திவாய்ந்தவராக இருக்கிறார்” என்று கூறினார்.
கடந்த ஒரு வாரத்தில், இலங்கை கிரிக்கெட்டில் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிறைய நடந்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதாவது 2025 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.
இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவை நியமித்தார். ஆனால், ஒரு நாள் கழித்து, இலங்கை நீதிமன்றம், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த உத்தரவுக்கு 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்து வாரியத்தை மீண்டும் நிறுவியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் விரிவான தலையீடு காரணமாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யால் இடைநீக்கம் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.