scorecardresearch

மோடி ஸ்டேடியத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Cricket World Cup: Coming up in Oct-Nov, India vs Pak at Ahmedabad’s Modi Stadium Tamil News
The Narendra Modi Stadium is India’s largest by capacity. File

Cricket World Cup 2023 Tamil News: இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நடத்தும் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்க உள்ளது. நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு மற்றும் தர்மஷாலா ஆகிய நகரங்களில் பயிற்சி போட்டிகள் மற்றும் லீக் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த மைதானங்களில், 7 மைதானங்கள் மட்டுமே இந்தியாவின் லீக் போட்டிகளை நடத்தும். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அகமதாபாத் மட்டுமே இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடும்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் பரம போட்டியாளராக வலம் வரும் இவ்விரு அணிகள் இந்திய மண்ணில் 2016ம் ஆண்டுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால், ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள். இதேபோல், வெளிநாட்டில் இருந்தும் ரசிகர்கள் இந்தியாவுக்கு வருவார்கள். அதனால் 1 லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கிய போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் தனது பெரும்பாலான போட்டிகளை சென்னை மற்றும் பெங்களூருவில் விளையாட முடியும் என்று தெரிகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானமும் ஒரு இடமாக கருதப்படுகிறது. இதேபோல், வங்கதேசம் தனது பெரும்பாலான போட்டிகளை கொல்கத்தா மற்றும் கவுகாத்தியில் விளையாடலாம். ஏனெனில் இது அண்டை நாட்டிலிருந்து வரும் ரசிகர்களின் பயண தூரத்தை குறைக்கும்.

அக்டோபர்-நவம்பர் மழைக்காலமாக இருப்பதால், நவம்பர் முதல் வாரத்திற்கு முன்னதாக நாட்டின் தெற்கு பகுதிகளில் போட்டிகளை முடிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

இந்திய அணி நிர்வாகத்துடனும் பிசிசிஐ ஆலோசனை நடத்தியதாகவும், பாகிஸ்தானுடனான போட்டியைத் தவிர, போட்டிகளுக்கான விருப்பங்களைத் தேடுவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் மைதானங்களுக்கு ஒதுக்குமாறு பிசிசிஐயிடம் கோரியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் ஹோம் ஆதாயத்தை அதிகரிக்க விரும்புவதால், மெதுவான பிட்ச்களை விரும்புவதாக வாரியத்திடம் கூறப்பட்டுள்ளது.

“கடந்த சில ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்திய அணி மெதுவான தடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே அட்டவணை தயாரிக்கப்படும் போதெல்லாம் இந்திய அணி மெதுவான ஆடுகளங்களில் முன்னணி அணிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அவர்கள் சொந்த மண்ணில் நன்மையைப் பெற விரும்பினர், ”என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

“மாநில வாரியங்கள் ஏற்கனவே பிசிசிஐக்கு தங்கள் விருப்பப்பட்டியலை வழங்கியுள்ளன. ஆனால் போட்டிகளை மைதானங்களுக்கு ஒதுக்குவது குறித்து முடிவு பிசிசிஐயால் மட்டுமே எடுக்கப்படும் ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் போட்டியை சென்னையின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் நடத்துவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்கள் பிட்ச்கள் மெதுவாக இருக்கும் மற்ற மையங்களில் விளையாடப்படும்.” என்று பிசிசிஐ என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள மைதானங்களை மேம்படுத்த பிசிசிஐ ரூ.500 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, மைதானங்களின் நிலை குறித்த சமீபத்திய விமர்சனங்களுக்குப் பிறகு, சுத்தமான கழிப்பறைகள், எளிதாக அணுகல் மற்றும் சுத்தமான இருக்கைகள் ஆகியவற்றுடன் வாரியம் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று கூறியிருந்தார்

“உலகக் கோப்பைக்கு முன் நாட்டில் தற்போதுள்ள அனைத்து உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும். ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பையின் போது பரந்த அளவிலான ரசிகர்களுடன் ஈடுபட மைதானத்தின் மதிப்பீடு செய்யப்பட்டது. எனவே இந்த காலகட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்” என்று ஷா கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket world cup coming up in oct nov india vs pak at ahmedabads modi stadium tamil news