சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் புதன்கிழமை சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் அக்டோபர் 8-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்காக புதன்கிழமை சென்னை வந்தடைந்தனர். உலகக் கோப்பை போட்டியை நடத்தும் இந்தியா அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியாவை எதிர்த்து சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டியைத் தொடங்குகிறது.
சென்னை வந்த இந்திய அணியில் விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஆர். அஷ்வின், ஷுப்மன் கில் மற்றும் பிற வீரர்கள் இருந்தனர். அதே போல, சென்னை வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் காணப்பட்டனர். இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
ஆசிய கோப்பையை கைப்பற்றியதுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், இந்தியா உலகக் கோப்பையில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. தொடர் மழை காரணமாக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த சூழலில்தான், இந்திய அணி உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் விளையாடுகிறது.
உலகக் கோப்பை இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ ஆகியோர் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“