உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பொருளாதாரத்தை ₹22,000 கோடி ($2.6 பில்லியன்) வரை உயர்த்தக்கூடும் என்று பாங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழைமை (அக்.5) அன்று தொடங்கி நவம்பர் வரை நடைபெறும் இந்த போட்டியானது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும் இந்நிகழ்வு, செப்டம்பரில் தொடங்கிய மூன்று மாத பண்டிகைக் காலத்துடன் ஒத்துப்போகிறது. மேலும் சில்லறை விற்பனைத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2019 இல் காணப்பட்ட 552 மில்லியனை விட தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் உட்பட போட்டிக்கான மொத்த இந்திய பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்
இந்த காலகட்டத்தில் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் வாடகைகள் அதிகரித்துள்ளன, மேலும் 10 ஹோஸ்ட் நகரங்களில் முறைசாரா துறையில் சேவைக் கட்டணங்கள் பண்டிகை கால தாக்கத்தின் மேல் கணிசமான அதிகரிப்பைக் காட்டக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்தமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பணவீக்கம் 0.15% - 0.25% வரை உயரக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த போட்டியானது, டிக்கெட் விற்பனை, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் உணவு விநியோகம் மீதான சரக்கு மற்றும் சேவை வரிகளின் மீதான வரி வசூல், நாட்டிற்கு கூடுதல் நிதி இடத்தை வழங்குவதன் மூலம் மத்திய அரசின் நிதிக்கு ஆதரவளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மேலும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“