Cricket News In Tamil : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த இவர், இந்தியாவின் 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 409 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.
மேலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், விக்கெட் வேட்டையில் முக்கிய பங்குவகிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அஸ்வின் எக்காலத்திற்கும் தலை சிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இந்திய அணியில் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வெளிநாட்டு ம்ண்ணில் அவர் குறிப்பிடத்தக்க அளிவில் எதுவும் செய்யவில்லை. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினை காட்டிலும் அக்ஷர்பட்டேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதுவே அஸ்வினை எல்லா கால கட்டத்துக்கும் தலைசிறந்த வீரர் என்று அழைப்பதில் எனக்கு இருக்கும் பிரச்சினையாகும் இதுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீர்ர் இயான் சேப்பல் உட்பட முன்னாள் வீரர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தன்மீதான இந்த விமர்சனத்திற்கு அஸ்வினே தனது ட்விட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அந்நியன் படத்தில் விக்ரம் காதல் குறித்து விவேக் சொல்லும்போது அப்படியெல்லாம் சொல்லாதடா சாரி, என்று கூறும் மீம்ஸ் படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அஸ்வினின் இந்த ட்விட் தற்போது இணையத்தல வைரலாகி வருகிறது.
😂😂😂🤩🤩 https://t.co/PFJavMfdIE pic.twitter.com/RbWnO9wYti
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) June 7, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil