பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய தினேஷ் கார்த்திக் – ஏன் தெரியுமா?

அந்த அணியின் துவக்க போட்டியை காண முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலமுடன் அந்த அணியின் ஜெர்சியை அணிந்து தினேஷ் கார்த்திக் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

By: September 8, 2019, 3:36:34 PM

பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் இன்னமும் நீடிப்பவர் தினேஷ் கார்த்திக். குறுகிய ஓவர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு, இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாய்ஸில் இன்னமும் இவர் நீடிக்கிறார். தவிர, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.

இந்த அணியின் உரிமையாளரான ஷாருக்கான், கரீபிய தீவில் நடக்கும் சிபிஎல். தொடரில் பங்கேற்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இதற்கிடையில் அந்த அணியின் துவக்க போட்டியை காண முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலமுடன் அந்த அணியின் ஜெர்சியை அணிந்து தினேஷ் கார்த்திக் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நீங்கள் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு தற்போது தினேஷ் கார்த்திக் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “பிசிசிஐ.,யின் அனுமதி பெறாமல் அங்கு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி டி.கே.ஆர்., தொடர்பான எவ்வித செயல்பாடுகளில் பங்கேற்க மாட்டேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் ஐபிஎல்., அல்லாத தனியார் லீக் தொடருக்காக நிகழ்ச்சியில் தினேஷ் பங்கேற்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Cricketer dinesh karthik tenders unconditional apology after violating bcci clause

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X