எங்கள் மகிழ்ச்சிக்கு நீ தான் காரணம் – மகள் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்

”எங்களை உன் பெற்றோர்களாக தேர்வு செய்ததற்கு நன்றி லட்டு” என்று மகிழ்ச்சியுடன் ஹன்விகாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Cricketer Natarajan shares his daughter Hanvika's photo

Cricketer Natarajan : தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் முதன்முதலாக தன்னுடைய மகள் ஹன்விகாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளுக்காக பறந்து  கொண்டே இருந்த நடராஜன் தாயகம் திரும்பியவுடன் தன்னுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். அப்போது அவர் தன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்  “எங்களின் சின்ன தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு நீ தான். நீ தான் எங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கிறாய். எங்களை உன் பெற்றோர்களாக தேர்வு செய்ததற்கு நன்றி லட்டு…  உன்னை நேசிக்கின்றோம். என்றென்றும்”

 

பிறந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடராஜன். நடராஜனுக்கும், அஸ்வினுக்கும் ஒரு விதி. கேப்டன் கோலி என்றால் ஒரு விதி. தன்னுடைய மகள் பிறந்து பல நாட்கள் ஆன நிலையிலும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் நடராஜன், ஆனால் விராட் கோலி தன்னுடைய மனைவியின் பிரசவத்திற்காக விடுப்பில் சென்றுள்ளார் என்று மூத்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கோலிக்கு ஒரு சட்டம்; நடராஜன், அஸ்வினுக்கு ஒரு சட்டமா? கேள்வி எழுப்பிய சுனில் கவாஸ்கர்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricketer natarajan shares his daughter hanvikas photo

Next Story
பெடரர், நடால் சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் ஜோகோவிச்Sports news in tamil Novak Djokovic right to focus on Federer, Nadal and the Grand Slam record tennis tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com