News about India women's cricketer Rajeshwari Gayakwad in tamil: கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இந்திய மகளிர் அணியில் அறிமுமானவர் ராஜேஸ்வரி கயக்வாட் (31). இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளரான இவர், 2017 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டிய இந்திய அணியில் முக்கிய வீராங்கனையாக இருந்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. எனினும், மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்திருந்தார் ராஜேஸ்வரி.
சூப்பர் மார்க்கெட்டில் தகராறில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை… சிசிடிவி காட்சிகள் வெளியீடு…
இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராஜேஸ்வரி கயக்வாட் சூப்பர் மார்க்கெட்டில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஸ்வரி கயக்வாட் விஜயபுராவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சில அழகுசாதனப் பொருட்களை வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதன்பின்னர், அவருடை நண்பர்கள் என்று சொல்லப்படும் சிலர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை எடுத்துக் கொண்டு காவல்துறையில் புகார் செய்ய சென்றுள்ளனர். இதற்கிடையில், இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்யாமல் சுமுகமாக பிரச்னையை தீர்த்துக் கொண்டுள்ளனர். காவல்துறையில் அவர்கள் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்.
इंटरनेशनल महिला क्रिकेटर राजेश्वरी राजेश्वरी गायकवाड़ और सुपर मार्केट स्टोर स्टाफ में बहस और हाथापाई, सीसीटीवी में हुई पूरी घटना दर्ज
Watch: https://t.co/zUZq328SI6#RajeshwariGayakwad #Bharat24Digital @BCCI @PRAMOD_RAGHAVAN pic.twitter.com/ztufDbHSSK— Bharat 24 - Vision Of New India (@Bharat24Liv) December 1, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.