விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் தற்போது தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். கடந்த புத்தாண்டு தினத்தில் டெல்லியில் இருந்து தனது சொந்த மாநிலமான உத்திரகாண்ட்க்கு தனது சொகுசு காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இதனைத் தொடர்ந்து டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படட பண்ட் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே அவரை மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உடல்நலம் தேறிய பண்ட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனாலும் சில மாதங்கள் பண்ட் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போதைக்கு அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களையும் சர்வதேச தொடர்களையும் பண்ட் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
One step forward
— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5
இதனிடையே ரிஷப் பண்ட் இன்று தான் நடைப்பயிற்சி செல்லும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ஒரு படி முன்னே… ஒரு படி வலிமையாக…ஒரு படி மேன்மையாக…என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள பலரும் பண்ட் விரைவில் குணமடைய வாழத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/