பொது முடக்க விதிகளை மீறியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் கார், சென்னை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஸ்டேஷனுக்கு அருகில் வணிக வளாகங்கள்
சனிக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்), ராபின் வாகனம் ஓட்டியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தனது காரில் பயணிக்க கட்டாய இ-பாஸ் அல்லது சரியான காரணங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. தனது காரில் காய்கறிகளை வாங்க உத்தாண்டிக்கு ராபின் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
"அவர் மிகவும் கண்ணியமாக இருந்தார். பூட்டுதல் விதிகளை மீறியதற்காக அவரது வாகனத்தை நாங்கள் கைப்பற்றினோம்" என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தனது காரில் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணித்திருக்கலாம் என்றும் கூறினார்.
ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருமாறு, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை வாசிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதுவும் வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில், வாகனங்களை பயன்படுத்தாமல் சென்று வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை நிலவரப்படி, சென்னையில் 47,650 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய வாரங்களில் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குண்டான குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்? இதை கொஞ்சம் கவனிங்க!
ராபின் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1989-ல் தொடங்கி 2001-ல் முடிவடைந்த கிரிக்கெட் வாழ்க்கையில், ஓடிஐ போட்டிகளில் 69 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 2336 ரன்கள் எடுத்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பை இந்தியன்ஸில் உதவி பயிற்சியாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”