எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனை மாற்றிய சம்பவம் அந்த அணி வீரர்களுக்குகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா கேப்டனாக பதவி வகித்து வருகிறார். இதில் அவர் கேப்டன் பொறுப்பேற்ற பின் தான் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல் மும்பை அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் ஹர்த்திக் பாண்டியா.
2022- சீசனில் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இதில் 2022-ம் ஆண்டு சாம்பியன் ஆன குஜராத் அணி 2023-ம் ஆண்டு தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இதனிடையே 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்குள் வீரர்கள் மாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் மும்பை அணியில் வீரராக எப்படி களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், திடீரென மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டிய நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணியின் வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்கால தேவைக்காக இந்த மாற்றம் என்று மும்பை அணி நிர்வாகம் விளக்கம் அளித்தள்ள நிலையில், எவ்வித அறிவிப்பும் இல்லால் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் உட்பட மும்பை அணியின் வீரர்கள் பலரும் அணி நிர்வாகத்தின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. அதே சமயம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா தரப்பில் இருந்து இதுவரை எவ்வித வாழ்த்து செய்தியும் கூறப்படவில்லை. சாம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறிய ரோகித் இவருக்கு ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
What If 🤔 #MI #CSK #IPL2024 pic.twitter.com/wmrIauLv4U
— S.Badrinath (@s_badrinath) December 16, 2023
இதனிடையே ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் வீரர்கள் ட்ரேடிங்க முறை மீண்டும் வழங்கப்பட்டால் அதில் ரோகித் சர்மா அணி மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.
ரோகித் சர்மா சென்னை அணியின் ஜெர்சியை அணிந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஒரு வேளை இது நடந்தால் என்று கூறியுள்ளார். தற்போது 36 வயதாகும் ரோகித் சர்மா, சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார்போல் இந்த ஆண்டு ரோகித் சென்னை அணிக்காக விளையாடுவார் என்றால் ரசிகர்களிடம் இருந்து அவருக்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.