chennai-rain | chennai-super-kings: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல் மற்றும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சந்திக்கும் மிக மோசமான மழையை இந்தப் புயல் ஏற்படுத்தியுள்ளது.
இடைவிடாது பெய்த மழையால் சென்னையின் வடிகால் அமைப்பில் கடுமையான நீர்த்தேக்கமும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. தெருக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்தை சீர்குலைத்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நகரின் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். தற்போது தான் மின் விநியோகம் மெல்ல மெல்ல சீரமைக்கப்பட்டு வருகிறது. நகரின் தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கரையை கடக்கும் மிக்ஜம்
இந்நிலையில், மிக்ஜாம் புயல் தற்போது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதியை ஒட்டிய பாபட்லா பகுதியில் கரையை கடக்கத்தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கக்கூடிய நேரத்தில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கவலை
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும், இதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தமிழக வீரரான அஸ்வின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அனைவரும் மற்றொரு நாள் பொறுமையாக இருங்கள். மழை நின்றாலும், சீரமைக்க சிறிது நாள் பிடிக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.
Hang tight for another day everyone🙏
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 4, 2023
Even if the rain stops, recovery is going to take a while. #ChennaiRains2023 #Michaung pic.twitter.com/QsnkuxuXx3
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விக்கெட் கீப்பர் வீரரான தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சென்னை மக்களே, தயவு செய்து உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வீட்டிற்குள்ளேயே இருங்கள், இது போன்ற நேரங்களில் அது மிகவும் முக்கியமானது. நிலைமையை மேம்படுத்த அயராது உழைக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு பெரிய சல்யூட். அனைவரும் ஒத்துழைப்போம், ஒன்றுபட்டு இதை கடந்து செல்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.
Chennai folks, please prioritize your safety and stay indoors - it's crucial during times like these. A big salute to all the officials working tirelessly to improve the situation. Let's all cooperate and get through this together. 🙏#ChennaiStaySafe #CycloneMichuang
— DK (@DineshKarthik) December 4, 2023
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கனமழைக்கு மத்தியில் சென்னையில் உள்ள அனைவருக்கும் எனது எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் அனுப்புகிறேன். மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரும் வலுவாக இருங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.
Sending my thoughts and prayers to everyone in #Chennai amidst heavy rains. Gratitude to all those who are working tirelessly to ensure the well-being & safety of the people. Stay strong Everyone 🙏🏼
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 4, 2023
சென்னை அணியில் விளையாடி வரும் இலங்கை வீரரான மதீஷ பத்திரன தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பாதுகாப்பாக இருங்கள் எனது சென்னையே! புயல் 🌪️ உக்கிரமாக இருக்கலாம், ஆனால் நமது பின்னடைவு வலிமையானது. நல்ல நாட்கள் நெருங்கிவிட்டன. கவனமாக இருங்கள், வீட்டுக்குள்ளேயே இருங்கள், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Stay safe, my Chennai! The storm 🌪️ may be fierce, but our resilience is stronger. Better days are just around the corner. Take care, stay indoors, and look out for one another 💛💛💛 #yellove #ChennaiWeather #StaySafe #ChennaiRains #CycloneMichaung https://t.co/ovbsziy7gv
— Matheesha Pathirana (@matheesha_9) December 4, 2023
இதேபோல், சென்னை அணியில் விளையாடி வரும் அஜிங்க்யா ரஹானே தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னையில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்காகவும், களத்தில் பணிபுரியும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
Wishing for the safety of everyone in Chennai and extending my gratitude to everyone working at ground zero! 🙏
— Ajinkya Rahane (@ajinkyarahane88) December 4, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.