New Update
/indian-express-tamil/media/media_files/xLt44sb90uhxlTWgQwbt.jpg)
சவுதி அரேபியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியை நேரில் கண்டு களிக்க கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மனைவியுடன் வந்தார்.
சவுதி அரேபியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியை நேரில் கண்டு களிக்க கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மனைவியுடன் வந்தார்.
Cristiano-ronaldo | salman-khan: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் குத்துச்சண்டை போட்டி நடந்தது. இப்போட்டியில் முன்னாள் யு.எஃப்.சி சாம்பியனான பிரான்சிஸ் நாகன்னோ மோத இருந்தார். இந்தப் போட்டியை நேரில் கண்டு களிக்க கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மனைவியுடன் வந்தார்.
இதேபோல், இந்திய பாலிவுட் நட்சத்திரமான சல்மான் கானும் அங்கு வந்திருந்தார். ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்த அந்த ஸ்டேடியத்தில் தனது மனைவியுடன் வந்த ரொனால்டோ சல்மான் கானை பார்த்தும் பார்க்காதது போல் அவரின் அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டே போட்டி நடக்கவிருந்த இடத்துக்கு சென்றார். அங்கு அவர் கால்பந்து சாம்பியன் வீரரான ரொனால்டோ லூயிஸ் நசாரியோவுக்கு கை கொடுத்து கட்டியணைத்தார்.
இந்நிலையில், பாலிவுட் நட்சத்திரமான சல்மான் கானை கால்பந்து நட்சத்திரம் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த நிகழ்வுக்குப் பிறகு இருவரும் சந்தித்து பேசிக்கொண்டார்களாக என்கிற தகவல் இதுவரை வெளியாகிவில்லை.
ரொனால்டோ அண்மையில் முன்னாள் யு.எஃப்.சி சாம்பியனான பிரான்சிஸ் நாகன்னோவின் பெரிய ரசிகர் என்று கூறி இருந்தார். ரொனால்டோ முதன்முதலில் சவுதி அரேபியாவுக்குச் சென்றபோது, அவரும் நாகன்னோவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. அங்கு ரொனால்டோ பிரான்சிஸ் நாகன்னோவை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
Salman bhai ignoring Ronaldo. Major flex. Tiger Zinda etc. pic.twitter.com/e7PUVcKFZ4
— Gabbar (@GabbbarSingh) October 30, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.