scorecardresearch

800 கோல்களை அடித்த முதல் வீரர்… கால்பந்து வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட ரொனால்டோ…!

Cristiano Ronaldo scores landmark 800th career goal Tamil News: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Cristiano Ronaldo Tamil News: 800th career goal for Cristiano Ronaldo

Cristiano Ronaldo Tamil News: சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 36 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.

தற்போது போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் உள்ள ரொனால்டோ 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் ஆர்செனல் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவர் பதிவு செய்தார்.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிறப்பான முறையில் பந்தை கடத்திச் சென்ற ரொனால்டோ ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் முதல் கோல் அடிதத்தார். அப்போது, சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக மற்றும் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சித்தமாக பயன்படுத்திய அதை கோலாக மாற்றினார். இதன் மூலம் 801 கோல் என்ற மைல்கல்ளை எட்டினார்.

800 கோல் என்ற புதிய சாதனையை பதிவு செய்துள்ள ரொனால்டோவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினால் ஆயிரம் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துவிடுவார் என்று தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் மான்செஸ்டர் யுனைடட் அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் ஆர்செனல் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cristiano ronaldo tamil news 800th career goal for cristiano ronaldo