'தண்ணீர் குடிங்க' கோகோ கோலா பாட்டிலை தூக்கியடித்த ரொனால்டோ: வைரல் வீடியோ!

Cristiano Ronaldo latest viral video: பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனக்கு முன்னால் இருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் வீடியோ தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Cristiano Ronaldo latest viral video: பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனக்கு முன்னால் இருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் வீடியோ தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Cristiano Ronaldo Tamil News: Drink water' Ronaldo removes Coca Cola bottles during press conference; video goes viral

Cristiano Ronaldo Tamil News: 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ 2020) தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியை எதிர்கொள்கிறது.

Advertisment

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேஜையின் மீது இருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ மேஜையின் மீது இருந்த கோலா பாட்டில்களை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கி வைத்து, “அகுவா” என தெரிவித்தார் (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை). மேலும் மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிக்னல் செய்தார்.

அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோலா பாட்டில்களை அகற்றாமல் இருந்தார். ஏனென்றால், யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது.

Advertisment
Advertisements

இந்த சர்ச்சையான வீடியோ குறித்து பேசிய ரொனால்டோ, "நான் பல ஆண்டுகளாக மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடி வருகிறேன். எனவே இதனால் என்னை கட்டம் கட்ட முடியாது. நான் 18 அல்லது 19 வயதினராக இருந்தால், எனக்கு சில தூக்கமில்லாத இரவுகள் இருக்கலாம். ஆனால் எனக்கு 36 வயதாகிறது. இடமாற்றம் பெற்றாலும் சரி அல்லது அடுத்து என்ன நடந்தாலும் சரி ” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Viral Video Sports Viral Christiano Ronaldo Cristiano Ronaldo Portugal Football Team Football

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: