சாதனை நாயகன் ரொனால்டோ… 410 கிலோ எடையில் சிலை வடித்த கோவா அரசு…!

410-kg statue of Cristiano Ronaldo has been installed in Calangute, Goa Tamil News: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோவா அரசு அதன் தலைநகர் பனாஜியில் சுமார் 410 கிலோ எடையுள்ள சிலையை நிறுவியுள்ளது.

Cristiano Ronaldo Tamil News: Footballer Ronaldo's statue installed in Goa

Cristiano Ronaldo Tamil News: சர்வதேச கால்பந்து அரங்கில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 36 வயதான இவர் தற்போது போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் உள்ளார்.

ரொனால்டோ சமீபத்தில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்தார். இதேபோல், யூ ஈ எப் ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரில் 140 கோல்கள் அடித்த வீரராகவும் உள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை (பேலண்-டி-ஓர் விருது) 5 முறை வென்றுள்ளார். இந்த விருதை அதிக முறை பெற்ற ஐரோப்பாவை சேர்ந்த கால்பந்து வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

Cristiano Ronaldo Tamil News: 800th career goal for Cristiano Ronaldo

இப்படி பல சாதனைகளுடன் கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான் வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோவா தலைநகர் பனாஜியில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சுமார் 410 கிலோ எடையுள்ள இந்த சிலை, இளைய தலைமுறையினரை கால்பந்து விளையாட்டில் ஊக்குவிக்கவும், மாநிலத்திலும் நாட்டிலும் கால்பந்து விளையாட்டை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் என்கிற நோக்கத்திற்காககும் நிறுவப்பட்டுள்ளதாக கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் உருவான இந்த சிலை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றுஅச்சத்தால் சிலையை நிறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தியாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை அமைக்கப்படுவது இதுதான் முதல்முறை. இது நமது இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கால்பந்தை அடுத்த படிக்கு கொண்டு செல்லவும் உதவும். இதைத்தான் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த சிலை முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு விளையாட்டில் இன்னும் ஆர்வம் ஏற்படும்.” என்று அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cristiano ronaldo tamil news footballer ronaldos statue installed in goa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com