IPL 2023 – Chennai Super Kings vs Mumbai Indians Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவோன் கான்வே 44 ரன்கள் எடுத்தார்.

முடிவுக்கு வந்த சொந்த ஊர் சோகம்
இந்நிலையில், சென்னை அணி ஒரு சீசனில் இரண்டு லீக் போட்டிகளிலும் மும்பையை தோற்கடித்து அசத்தியுள்ளது. மேலும், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்தி சோக கதைக்கு முடிவுரை எழுதியுள்ளது.

Photo credit: R. Pugazh Murugan
ஐபிஎல்லில் சென்னை – மும்பை மோதல் முடிவுகள்
ஒட்டுமொத்த போட்டிகள் எண்ணிக்கை: 36
மும்பை – 20
சென்னை – 16
கடைசி ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்:
சென்னை – 4
மும்பை – 1
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil