/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-16T151859.028-1.jpg)
IPL 2023: Chennai Super Kings Best XI among retained players Tamil News
IPL 2023 - Chennai Super Kings Tamil News: இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீசனில் மிகவும் ஏமாற்றம் கண்ட பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் எதிர்காலத்திற்காக அணியை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் அவர்களின் மிகவும் ஈர்க்கக்கூடிய வீரர்களில் ஒருவராக இருந்த ராபின் உத்தப்பா ஏற்கனவே தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஐபிஎல்லில் சிறந்த வீரர்களில் ஒருவரான டுவைன் பிராவோ மினி-ஏலத்திற்கு (டிசம்பர் 23) முன்னதாக தக்கவைக்கப்படவில்லை.
மார்க்யூ போட்டியின் அடுத்த பதிப்பு கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்றும், இதனால் வரும் பதிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 4 முறை கோப்பையை முத்தமிட்ட சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. ஆனால் அவர்களின் சமீபத்திய வடிவம் சற்று கவலை அளிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-16T103708.887-1.jpg)
சென்னை அணி முந்தைய சீசனில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியாமல் போனதற்கு நிலைத்தன்மை ஒரு காரணியாகும். ஆனால் இப்போது, பயோ-பபிள் மற்றும் கோவிட் இல்லாமல், அந்த அணி அவர்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தங்களின் கோட்டைக்கு (சேப்பாக்கம்) திரும்ப உள்ளார்கள். அது அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.
மேலும், பல ஆண்டுகளாக அவர்கள் உருவாக்கிய அணி காரணமாக, உள்ளூர் வீரர்கள் சென்னையின் நிலைமைகளுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள் மற்றும் தோனி, தனது சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதன் மூலம், இந்தியன் பிரீமியர் லீக் 16வது சீசனில் சென்னை அணியை எப்படி களமிறக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இப்போது தக்கவைக்கப்பட்ட அனைத்து வீரர்களில் சென்னையின் சிறந்த லெவன் வீரர்கள் யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சி.எஸ்.கே அணி தக்கவைத்துள்ள வீரர்களில் சிறந்த லெவன் வீரர்கள்:
11. முகேஷ் சவுத்ரி
கடந்த போட்டியில் சென்னை அணியின் சிறந்த வேகப்பந்து பந்துவீச்சாளராக முகேஷ் சவுத்ரி இருந்தார். மேலும், புதிய பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்துபவராகவும் இருந்தார். இதனால், அவர் எதிர்வரும் சீசனில் தீபக் சாஹருடன் இணைந்து மிகவும் ஆபத்தானவராக இருக்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T171615.217.jpg)
முகேஷ் சவுத்ரி ஐபிஎல்லின் 15வது பதிப்பில் விளையாடிய 13 போட்டிகளில், 9.32 என்ற எக்கனாமியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடியவர். அதே நேரத்தில் நிறைய ரன்களை அவர் கசிய விடுகிறார். வரவிருக்கும் சீசனில் அவர் மேம்படுத்த வேண்டிய ஒரு பகுதி இதுவாகும்.
அவரது தற்போதைய ஃபார்மைப் பற்றி பேசுகையில், அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. மேலும், நடுவில் நிறைய கிரிக்கெட் விளையாடவில்லை. அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் அவரது முன்னேற்றத்திற்கு நிறைய இடங்கள் உள்ளன.
10. மகேஷ் தீக்ஷனா
22 வயதான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சென்னைக்கு மிகவும் முக்கியமானவராக இருப்பார். குறிப்பாக சேப்பாக்கத்தின் ஆடுகளங்கள் மகேஷ் தீக்ஷனாவுக்கு திருப்புமுனையாக இருக்கும். அவர் ஒரு ரன்அவே மேட்ச்-வின்னராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளார் மற்றும் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலின் கீழ், அவர் வரவிருக்கும் சீசனில் சிறப்பாக செயல்படுவார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T171731.062.jpg)
கடந்த ஆண்டில் சென்னை அணிக்காக அவர் விளையாடிய 9 போட்டிகளில், 7.46 என்ற எக்கனாமியில் 12 விக்கெட்டுகளை எடுத்தார். அணியில் ஒரே முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால், தனது அணிக்கு சிறப்பாக பந்து வீசும் பொறுப்பும் அவரிடம் உள்ளது.
அவரது தற்போதைய ஃபார்மைப் பற்றி பேசுகையில், தீக்ஷனா சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையில் 9 விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் சிக்கனமாகவும் இருந்தார். அவர் அத்தகைய வடிவத்தில் நிலைத்திருந்தால், அடுத்த சீசனில் பர்பிள் கேப் போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிட முடியும்.
9. தீபக் சாஹர்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரைத் தவறவிட்ட பிறகு, டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பையும் தீபக் சாஹர் தவறவிட்டார். இதனால், அவர் வெற்றிக்காக பசியுடன் இருப்பார். மிக முக்கியமாக, 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இடம்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T171826.609.jpg)
மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் சாஹரை மீண்டும் பந்துவீச்சு பிரிவின் தலைவராகுவார். அவர் 2019 ஆம் ஆண்டில் மிகச்சிறப்பாக பந்துவீசி இருந்தார். மேலும் அவருக்கு சாதகமாக, கேப்டன் எம்எஸ் தோனி உலகக் கோப்பைக்கு முன்னதாக அவரிடமிருந்து சிறந்ததைக் கொண்டு வர முடியும். பேட்டிங்கிலும் பவுண்டரி சிக்ஸர்களை அவர் பறக்கவிட முடியும். இது சென்னைக்கு லோ-ஆடரில் கூடுதல் பலம் தரும்.
பந்து வீச்சில் அவரது தற்போதைய ஃபார்ம் சராசரியாக உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில், அவர் மூன்று போட்டிகளில் இருந்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். மொஹாலியில் நடந்த முதல் டி20-யில் அவரது ஸ்பெல் பந்தின் மூலம் அவரது தனது திறனை மீண்டும் நிரூபித்தார். அவர் அதைத் தக்க வைத்துக் கொண்டால், சென்னை வரலாற்றில் ஐந்தாவது பட்டத்தை வெல்ல சாஹர் உதவ முடியும்.
8. டுவைன் பிரிட்டோரியஸ்
வரும் ஐபிஎல் போட்டியில் டுவைன் பிராவோவின் வெற்றிடத்தை டுவைன் பிரிட்டோரியஸ் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தென்ஆப்பிரிக்க வீரரான அவர் தன்னை இன்னும் சர்வதேச போட்டியில் நிரூபிக்கவில்லை.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய பிரிட்டோரியஸ் 44 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது 10 எக்கனாமி மிக அதிகமாக உள்ளது. மேலும் அவர் விளையாடும் லெவனில் தொடர்ந்து இடம் பிடிக்க, அது மாற வேண்டும். எவ்வாறாயினும், முந்தைய ஆண்டில் அவரது அற்புதமான ஸ்டிரைக் ரேட் 157.14 காரணமாக, வரும் சீசனில் அவர் பேட்டிங்கில் அதிக வாய்ப்புகளைப் பெறுவார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T171958.487.jpg)
33 வயதான அவர், கடந்த ஒரு மாதத்தில், ஒரு ஆட்டம் கூட விளையாடவில்லை, அதற்கு முன் அவரது ஃபார்ம் கவலைக்குரிய விஷயம். இருப்பினும், அவர் களத்தில் மிகவும் ஆபத்தானவராக இருக்கலாம்.
7. ரவீந்திர ஜடேஜா
முந்தைய சீசனின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தொடரின் நடுவில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவரது காயம் காரணமாக, மேலும் பங்கேற்கவில்லை. அவர் சென்னை அணியை விட்டு வெளியேறுகிறார் என்ற வதந்திகள் பரவின. மற்ற உரிமையாளர்களின் பல சலுகைகள் இருந்தபோதிலும், அவர் சென்னை அணி தான் எப்போதும் என்று தனது பதிவு வாயிலாக உரக்க கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172103.076.jpg)
32 வயதான அவர், கடந்த ஆண்டு விளையாடிய 10 போட்டிகளில், 118,37 ஸ்ட்ரைக் ரேட்டில் 116 ரன்கள் எடுத்தார். முந்தைய ஆண்டில் அவர் எவ்வளவு மோசமாக இருந்தார் என்பதை இது நிரூபிக்கிறது. இதனால் போட்டியின் 16 வது சீசனில் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில், ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது அவரது தரத்திற்கு கீழே உள்ளது.
ஜடேஜா காயம் அடைந்து இந்தியாவுக்கான டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு அவர் திரும்புகிறார்.
6. எம்எஸ் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸின் இதயமும் ஆன்மாவுமான எம்எஸ் தோனி தனது வாழ்க்கையில் கடைசியாக களம் இறங்குவார். உண்மையில் இது அவரது கடைசி சீசனாக இருந்தால், கேப்டன் கூல் கோப்பையுடன் வெளியேற விரும்புவார் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஐபிஎல் கோப்பைகளுடன் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வார்
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172211.042.jpg)
41 வயதான அவர், கடந்த ஆண்டு 14 போட்டிகளில், 123.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 232 ரன்கள் எடுத்தார். முந்தைய ஆண்டுகளில் மிகவும் போராடிய பிறகு, தோனி இறுதியாக கடந்த ஆண்டில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதைக் காட்டினார். ஆனால் மீண்டும் ஒரு வருட இடைவெளியுடன், அவர் ஒரு காலத்தில் பிரபலமடைந்த அதே கிரிக்கெட் பிராண்டில் விளையாடுவது அவருக்கு கடினமாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172240.434.jpg)
அவரது பேட்டிங்கை விட, வரும் சீசனில் அவரது கேப்டன்ஷிப்தான் சென்னைக்கு முக்கியமானதாக இருக்கும். தோனியை விட சிறப்பாக விளையாடும் எந்த கிரிக்கெட் வீரர்களும் இல்லை, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் அவரது தரம் தான் அவரை விளையாட்டின் ஜாம்பவான் ஆக்குகிறது. இதனால், அவரது பேட்டிங்கை விட, அவரது கேப்டன்ஷிப் திறமையே சிஎஸ்கேக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
5. சிவம் துபே
சிவம் துபேவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அவர் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், மிடில்-ஆடரில் அவர் மிகவும் ஆபத்தானவராக இருக்கலாம்.
29 வயதான ஷிவம் துபே, கடந்த சீசனில் 11 போட்டிகளில் 156.22 ஸ்டிரைக் ரேட்டில் 289 ரன்கள் எடுத்தார். அவர் நிறைய நெகிழ்வுத்தன்மையை வழங்குபவர் மற்றும் வரிசையில் எங்கும் பேட் செய்ய முடியும். ஆனால் ஒரு தெளிவான ரோலை அவருக்கு வழங்கினால், ஒரு ரன்அவே மேட்ச்-வின்னராக முடியும். இப்போது, ஒரு திறமையான பந்துவீச்சாளராக இருந்தபோதிலும், ரவீந்திர ஜடேஜாவோ அல்லது எம்எஸ் தோனியோ அவரை நம்பவில்லை. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் இடையில் ஓரிரு ஓவர்கள் வீச முடியும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172338.052.jpg)
அவரது சமீபத்திய ஃபார்மிற்கு வரும்போது, துபே மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார். இறுதியில் ஈடன் கார்டனில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையை வெல்ல அவரது அணிக்கு உதவினார். பேட்டிங்கில் அவரது கேமியோக்கள் மிகவும் முக்கியமானவை. மேலும் அவர் சென்னைக்காக இதேபோன்ற ரோலை வகிக்க முடிந்தால், அவர் அணிக்கு ஒரு சொத்தாக இருக்க முடியும்.
4. அம்பதி ராயுடு
மூத்த வீரரான அம்பதி ராயுடு சென்னையின் பேட்டிங் ஆர்டரின் தூண் என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக, அவர் சென்னை அணியில் தனது பேட்டிங்கை நிரூபித்துள்ளார் மற்றும் அவர்களின் பேட்டிங் யூனிட்டில் ஈடுசெய்ய முடியாதவர். ஆங்கர் அல்லது ஸ்மாஷர் ரோலில் இருந்தாலும், ஜென்டில்மேன் கேமில் விரைவாக கியர்களை மாற்றும் திறன் ராயுடுவுக்கு உண்டு.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172448.067.jpg)
37 வயதான ராயுடு 2022 ஆம் ஆண்டில், தனது திறமைக்கு ஏற்றவாறு விளையாட முடியவில்லை. ஆனால் இதற்கு முன்பு சென்னைக்காக சில மேட்ச் வின்னிங் நாக்களை விளையாடியுள்ளார். 13 போட்டிகளில், 122.32 ஸ்ட்ரைக் ரேட்டில் 274 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, மார்க்யூ போட்டியின் வரலாற்றில், ராயுடு 188 போட்டிகளில் விளையாடி 4190 ரன்கள் எடுத்துள்ளார். இது இறுதியில் அவர் ஏற்படுத்தும் சேதத்தை நிரூபிக்கிறது.
இருப்பினும், சென்னையின் பல டாப்-ஆர்டர் பேட்டர்களைப் போலவே, ராயுடுவின் ஃபார்ம் சற்று கவலைக்குரியது. விஜய் ஹசாரே டிராபியில் பரோடா அணிக்காக நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த ராயுடு நான்கு போட்டிகளில் 102 ரன்கள் எடுத்தார். டி20களில், ஆறு போட்டிகளில் வெறும் 107 ரன்களுடன் அவரது எண்ணிக்கை மேலும் குறைந்தது.3.
3. மொயீன் அலி
மொயீன் அலி சமீபத்திய வரலாற்றில் சென்னையின் சிறந்த கையகப்படுத்தல் என்று கூறலாம். இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் வீரரான இவர் சென்னையின் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் எதிரணியை எதிர்கொள்ளவும், சென்னைக்கு ஒரு திடமான தொடக்கத்தை வழங்கவும் விரும்புகிறார். அதை அவர்களின் மிடில் ஆர்டர் பின்னர் பயன்படுத்துகிறது. அவர் மிகவும் திறமையானவர் மற்றும் அவர் தனது செயல்திறனுடன் மிகவும் ஒத்துப்போகும் ஒரு வகையான வீரர். இதை தோனி அல்லது சிஎஸ்கே நிர்வாகம் உண்மையில் பாராட்டுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/moeen-ali.jpeg)
35 வயதான அலி, 2022 ஆம் ஆண்டில், 10 போட்டிகளில் 137.85 ஸ்ட்ரைக் ரேட்டில் 244 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில், அவர் வெறும் 6.63 என்ற எக்கனாமியில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தார். அவர் மிடில் ஓவர்களில் எதிரணியைக் கட்டுப்படுத்துகிறார். மேலும் பந்து திரும்பும் சீப்புக்கில், மொயீன் அலி தோனியின் விருப்பமாக இருக்க முடியும்.
இருப்பினும், அவரது தற்போதைய வடிவம் கொஞ்சம் கவலைக்குரியதாக இருக்கலாம். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், அவரது பேட்டிங் எண்கள் சரியாக இல்லாத நிலையில் அவரை அதிகம் பந்துவீச விடவில்லை. அவர் தனது கடைசி ஏழு டி20 போட்டியில் வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் நேர்மறையான விஷயம் என்னவென்றால், மொயீன் தனது முழுமையான சிறந்த நிலைக்குத் திரும்புவதற்கு போதுமான நேரம் கிடைக்கும்.
2. டெவோன் கான்வே
நியூசிலாந்து வீரரான டெவோன் கான்வே, கடந்த சீசனில் குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 வயதான அவர் ஏழு போட்டிகளில் 145.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 252 ரன்கள் எடுத்தார்.
கெய்க்வாட் ஒரு முனையை வைத்திருப்பதால், முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட கான்வேக்கு சுதந்திரம் கிடைக்கும், இதனால், தொடக்க வீரராக மிகவும் ஆபத்தானவர். தற்போது அவர் சிறப்பான ஃபார்மில் இல்லாவிட்டாலும், இந்தியாவுக்கு எதிரான தொடரில் நிச்சயம் அதை மாற்ற முடியும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172640.758.jpg)
ஒரு அழிவுகரமான பேட்டராக இருப்பதைத் தவிர, கான்வே களத்தில் அற்புதமானவர். கேப்டன் எம்எஸ் தோனி தவறினால், கான்வே விக்கெட்டுகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
- ருதுராஜ் கெய்க்வாட்
25 வயதான ருதுராஜ் கெய்க்வாட் நிறைய போட்டியில் பரபரப்பாக இருந்துள்ளார். புனேவில் பிறந்த இவர் 2021 ஆம் ஆண்டில், ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் ஆட்டமிழக்காத வீரர் ஆனார். 2022 ஆம் ஆண்டில், அவரது ஃபார்ம் குறைந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் 14 போட்டிகளில் 368 ரன்கள் எடுத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Ruturaj-Gaikwad-1.jpeg)
கெய்க்வாட் சென்னைக்கு ஒரு வலுவான தொடக்கத்தை வழங்குவதில் பெயர் பெற்றவர். அவர் அதைத் தொடர்ந்தால், 20 ஓவர்களுக்குப் பிறகு சென்னை ஒரு மிகப்பெரிய ஸ்கோரைப் பதிவு செய்யலாம். சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களில் ஒருவராக இருப்பதால், களத்தில் அவரது சுறுசுறுப்பும் கண்ணைக் கவரும் மற்றும் பேட்டிங்கில் சிஎஸ்கே வரும் சீசனில் அவரை அதிகம் சார்ந்திருக்கும்.
ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக சிறப்பாக செயல்பட்டாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் ரன் வேட்டை நடத்த பசியுடன் இருப்பார். அவர் தற்போது விஜய் ஹசாரே டிராபியில் ரெயில்வேஸுக்கு எதிரான ஒரு சதம் உட்பட இரண்டு போட்டிகளில் 164 ரன்கள் எடுத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-19T172817.592.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியல்:
தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா
விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:
டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.