ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, தோனியின் கேம் பிளான் என்பது எவருக்கும் புரியாதது. ஒவ்வொரு சீசனிலும், குறைந்தது அரையிறுதி வரை சிஎஸ்கே எப்படி முன்னேறுகிறது என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. 'அந்த சீக்ரெட்டை நான் ஓய்வு பெற்ற பிறகு சொல்கிறேன்' என்று தோனியே கூறியிருக்கிறார்.
இம்முறை 2020 ஐபிஎல் தொடரை முன்னிட்டு நேற்று நடந்த ஏலத்திலும், எதிர்பார்த்தபடியே பெரியளவில் அலட்டிக் கொள்ளாத தோனி&கோ செலக்டிவாக சில வீரர்களை மட்டும் எடுத்து அணியை லைட்டாக பட்டி பார்த்திருக்கிறது.
அதுவும், பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு எடுத்த சிஎஸ்கே-வின் கேம் பிளான் சற்று புரியவில்லை. எனினும், ஹர்பஜனுக்கு சரியான மாற்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அண்டர் எஸ்டிமேட் பவுலர் அல்ல பியூஷ் சாவ்லா. சற்று காத்திரமான வீரன் தான். தனது ஓவரில் சிக்ஸ் அடித்துவிட்டால், தனது கான்ஃபிடன்ட் லெவல் குறையாமல் பந்து வீசுவது இவரது நம்பர்.1 திறன். தவிர, பேட்டிங்கிலும் சில பவுண்டரிகள் கியாரண்டி தருகிறார். ஆனால், 6.75 கோடி கொடுத்து எடுத்திருக்க வேண்டுமா? என்ற நெருடலைத் தவிர, பியூஷ் சாவ்லாவுக்கு மகிழ்ச்சியுடன் வெல்கம் கொடுக்கலாம்.
எனினும், சாவ்லாவை தேர்வு செய்திருப்பதை சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்து வருகின்றனர்.
19, 2019
19, 2019
19, 2019
19, 2019
19, 2019
19, 2019
19, 2019
இதுகுறித்து பியூஷ் சாவ்லா கூறுகையில் "ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை விடவும், எம்எஸ் டோனி தலைமையின் கீழ் விளையாடுவதை விடவும் சிறந்தது ஏதும் இருக்க முடியாது.
யாராக இருந்தாலும் ஒரு வீரராக சிறந்த அணியில் இடம் பிடித்து அந்த அணிக்காக விளையாடத்தான் விரும்புவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலம் எடுத்தபின், அதைவிட மேலும் அந்த அணியிடம் ஏதும் கேட்க முடியாது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்னை விடுவித்தது காம்பினேசனை பொறுத்து இருந்திருக்கலாம். அந்த அணி வேறு மாதிரியான காம்பினேசனை நினைத்திருக்கலாம். தற்போதைய ஈடன் கார்டன் ஆடுகளம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவானதாக இல்லை" என்றார்.
ரசிகர்களின் இந்த கேலி, கிண்டல்களை பொய்யாக்குவாரா இந்த சீனியர் சிங்கம்?