scorecardresearch

தெ.ஆ டி-20 லீக்: ‘சிஎஸ்கே தோனியை ஆலோசகராகப் பயன்படுத்தக் கூடாது’ – பிசிசிஐ அதிரடி!

No one playing in the IPL would be even allowed to be a mentor in overseas t-20 leagues Tamil News: சென்னை அணி அதன் ஐகான் வீரர் எம்எஸ் தோனியை தென்ஆப்பிரிக்கா டி-20 லீக்கில், அணியின் வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர் ஐபிஎல்லில் சிஎஸ்கேக்காக இன்னும் விளையாடி வருகிறார்.

CSK can’t use MS Dhoni as mentor in SA T20 League BCCI

SA T20 League – BCCI – MS Dhoni Tamil News: ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது ஓய்வு பெற்ற மற்றும் தொடரில் விளையாடும் எந்த இந்திய வீரரும், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இரண்டு டி20 லீக்களில் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஐபிஎல்லில் விளையாடும் எந்தவொரு வீரரும் இதுபோன்ற வெளிநாட்டு லீக்குகளில் வீரராகவும், வழிகாட்டியாகவும் இருக்கக் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் லிமிடெட் அதன் ஐகான் வீரர் எம்எஸ் தோனியை தென்ஆப்பிரிக்கா டி-20 லீக்கில் தனது அணிக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர் ஐபிஎல்லில் இன்னும் சிஎஸ்கேக்காக விளையாடி வருகிறார்.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவரிடம் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேசுகையில், “அனைத்து வகையான விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறும் வரை, உள்நாட்டு வீரர்கள் உட்பட எந்த இந்திய வீரரும் வேறு எந்த லீக்கிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாகிறது. எந்தவொரு வீரரும் இந்த வரவிருக்கும் லீக்குகளில் பங்கேற்க விரும்பினால், அவர் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கும்போது மட்டுமே அவ்வாறு செய்ய முடியும், ”என்று தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால், தோனி போன்ற ஒரு வீரர் இதுபோன்ற லீக்கில் வழிகாட்டியாக அல்லது பயிற்சியாளராக இருக்க முடியுமா என்று கேட்டதற்கு, அந்த பிசிசிஐ அதிகாரி, “அப்படியானால் அவர் சிஎஸ்கேக்காக ஐபிஎல் விளையாட முடியாது. முதலில் அவர் இங்கு ஓய்வு பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் ( TKR) டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கரீபியன் பிரீமியர் லீக் போட்டியைப் பார்த்ததன் மூலம் தனது மத்திய ஒப்பந்தத்தின் விதியை மீறியதற்காக தினேஷ் கார்த்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. மத்திய ஒப்பந்தப்படி, கார்த்திக் போட்டியைக் காண கலந்து கொள்வதற்கு முன் பிசிசிஐயிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கார்த்திக் தனது பதிலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்தின் வேண்டுகோளின் பேரில் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்றதாகவும், மெக்கலத்தின் வற்புறுத்தலின் பேரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் (TKR) ஜெர்சியை அணிந்துகொண்டு ஆட்டத்தைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

தென்ஆப்பிரிக்கா டி20 லீக் – 6 அணிகளை வாங்கிய ஐபிஎல் உரிமையாளர்கள்:

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போல் தென்ஆப்பிரிக்காவிலும் தென்ஆப்பிரிக்க டி-20 கிரிக்கெட் தொடர் என்ற ஒரு புதிய டி-20 லீக் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த தொடரையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அவ்வகையில், ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆணியும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சொந்தமாக்கியுள்ளன.

இதேபோல், ஐக்கிய அரபு எமிரேட் டி20 லீக்கில் ஏற்கனவே இந்திய உரிமையாளர்களுடன் உள்ள ஆறு உரிமையாளர்களில் ஐந்து பேரைப் பெருமைப்படுத்தியது. அவற்றில் மூன்று ஐபிஎல்லில் அணிகளைக் கொண்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதலீடு செய்துள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக்கில் முதலீடு செய்துள்ளனர்.

ஜாம்பவான் வீரர் கருத்து

சமீபத்தில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட், வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “”நான் ஐபிஎல்லை விமர்சிக்கவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் ஏன் பிக் பாஷ் லீக்கில் வந்து விளையாட மாட்டார்கள்? நான் ஒருபோதும் வெளிப்படையான மற்றும் நேர்மையான பதிலைக் கொண்டிருக்கவில்லை: உலகில் உள்ள ஒவ்வொரு வீரரையும் சில லீக்குகள் ஏன் அணுகுகின்றன? வேறு எந்த டி20 லீக்கிலும் எந்த இந்திய வீரரும் விளையாடுவதில்லை” என்று அவர் கூறியிருந்தார்.

கில்கிறிஸ்டின் பெயரை குறிப்பிடாமல், 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் 7வது சீசனின் போது தலைவராக இருந்த சுனில் கவாஸ்கர் இவ்வாறு பதிலளித்தார்.

“சில வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் இந்திய வீரர்களை ‘பிக் பாஷ்’ அல்லது ‘தி ஹன்ட்ரட்’ விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அடிப்படையில், அவர்கள் தங்கள் லீக்குகளுக்கு அதிக ஸ்பான்சர்ஷிப் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் கிரிக்கெட்டைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், இந்திய கிரிக்கெட் தனது கிரிக்கெட்டைப் பாதுகாக்க முயல்கிறது. அதன் மூலம் தங்கள் வீரர்கள் தங்கள் போட்டிகளுக்கு புதியதாக இருப்பதை உறுதிசெய்கிறது. வெளிநாடுகளில் விளையாடுவதைத் தடைசெய்து, ‘பழைய சக்திகள்’ தோழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டாருக்கான தனது கட்டுரையில் எழுதி இருந்தார்.

மேலும் அவர், “அவர்கள் தங்கள் நாட்டின் லீக்குகளுக்கு இந்திய வீரர்கள் கிடைப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் கடந்த அரை டஜன் ஆண்டுகளாக கிரிக்கெட் உலகம் கண்டுபிடித்ததைப் போல அற்புதமான வேலையைச் செய்யக்கூடிய துணை ஊழியர்களோ அல்லது மற்றவர்களோ இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஐபிஎல், சிறிது காலத்திற்கு, ஆஸ்திரேலிய லீக் என்று அழைக்கப்படும் ஆபத்தில் இருந்தது. ஏனென்றால், இத்தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, அணிகளின் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களும் இருந்தனர். கிரிக்கெட்டின் ‘பழைய சக்திகளுக்கு’ இது ஒருபோதும் இருவழித் தெரு அல்ல” என்றும் அந்த கட்டுரையில் இந்திய ஜாம்பவான் வீரர் கவாஸ்கர் எழுதியிருந்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Csk cant use ms dhoni as mentor in sa t20 league bcci