டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி ஆல்ரவுண்டர் ஜடேஜா இடையே லேசான வாக்குவாதம் நடந்ததும், அதன்பிறகு ஜடேஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை அணி நேற்று முன்தினம் (மே 20) டெல்லி அணிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஅப் சுற்றை உறுதி செய்ய முடியும் என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து நாளை (மே 23) சென்னையில் நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டி முடிந்த பிறகு கேப்டன் தோனியும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் மைதானத்தில் லேசான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதற்காக இந்த வாக்குவாதம் நடந்தது என்பது குறித:து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், ஜடேஜாவிடம் தோனி கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது. இதனால் சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கு மோதல் ஏற்படுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Definitely 👍 pic.twitter.com/JXZNrMjVvC
— Ravindrasinh jadeja (@imjadeja) May 21, 2023
இதனிடையே ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது ட்விடட்டர் பதிவில், இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ கர்மா நிச்சயம் திருப்பித் தரும் என்று பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜடேஜா எதற்காக இப்படி ஒரு பதிவை வெளியிட்டார் என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் மைதானத்தில் தோனி கடுமையாக நடந்துகொண்டதை தான் ஜடேஜா இப்படி குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜடேஜாவின் இந்த சர்ச்சைக்குரிய ட்விட் சென்னை அணிக்கும் அவருக்கும் இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்வதாக உள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் 7-வது இடத்தில் உள்ளார். ஆனால் பேட்டிங்கில் குறிப்பிடும்படியாக ரன் குவிக்காத ஜடேஜா டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்திருந்தாலும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“