scorecardresearch

ஜிம்முக்கு போனாலும் சரி; கிரவுண்டுக்கு வந்தாலும் சரி… அதிர வைக்கும் ‘தல’ ஃபேன்ஸ்

தோனி பயிற்சிக்காக ஆடுகளத்தை நோக்கிச் செல்லும்போது, ​​மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டியது.

CSK fans cheers as Skipper MS Dhoni Hits Gym, ENTER into Chepauk Tamil News
IPL 2023: Chennai Super Kings Fans cheer for Skipper MS Dhoni – video Tamil News

IPL 2023: Chennai Super Kings Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்காக தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

சென்னை அணிக்கு சேப்பாக்கத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஏப்ரல் 3-ந்தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், டிக்கெட் வாங்க அதிகாலை முதலே சேப்பாக்கத்தில் உள்ள கவுண்ட்டர் முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.

ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்பட்டன. ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தனர். இதே போல் ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000 ஆகிய விலைகளின் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது. படுஜோராக நடந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

பயிற்சி

இதற்கிடையில், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, களத்தில் ஆல்ரவுண்டர் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலி உட்பட பெரும்பாலான சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்களின் பயிற்சியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

ரசிகர்கள் ஆரவாரம்

இதேபோல், பயிற்சி மேற்கொள்ள கேப்டன் தோனி மைதானத்திற்குள் நுழைந்த போது ரசிகர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டியது. அவர்கள் ‘தல’ தோனி என ஆரவாரம் செய்து மகிழந்தனர். அதற்கு முன்னதாக, தோனி ஜிம்மில் வார்ம் அப் செய்வதை ரசிகர்கள் கண்டு களித்தனர். தோனி தனது பயிற்சியைத் தொடர்ந்ததால், சிஎஸ்கே ரசிகர்கள் ஜிம்மிற்கு வெளியே கூடி, உரத்த குரலில் ‘தோனி தோனி’ என்று உற்சாக வெள்ளத்தில் சத்தமிட்டனர். ரசிகர்கள் அவ்வாறு சத்தம் எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

இதேபோல், தோனி பயிற்சிக்காக ஆடுகளத்தை நோக்கிச் செல்லும்போது, ​​மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்த வீடியோ ஒன்றும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐபிஎல் 2023 தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி மோதுகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Csk fans cheers as skipper ms dhoni hits gym enter into chepauk tamil news

Best of Express