IPL 2023: Chennai Super Kings Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்காக தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
சென்னை அணிக்கு சேப்பாக்கத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஏப்ரல் 3-ந்தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை

ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்பட்டன. ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தனர். இதே போல் ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000 ஆகிய விலைகளின் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது. படுஜோராக நடந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.
பயிற்சி
இதற்கிடையில், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, களத்தில் ஆல்ரவுண்டர் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலி உட்பட பெரும்பாலான சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்களின் பயிற்சியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
The best view ever 💛🤩#WhistlePodu #Anbuden🦁 pic.twitter.com/vc0QOsK2XN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
ரசிகர்கள் ஆரவாரம்
இதேபோல், பயிற்சி மேற்கொள்ள கேப்டன் தோனி
Anbirku Nandri, Superfans! 💛Today will be a closed practice session! 💪🏻
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2023
You can watch the action from the live stream! 🥳#WhistlePodu #Yellove 🦁
🎥 : @SuperMaan__ pic.twitter.com/M5DHed2Kt4
Thala @msdhoni warming up in Gym and Crowd going crazy already 🔥 pic.twitter.com/ROTQ3PTJ2I
— 🎰 (@StanMSD) March 27, 2023
இதேபோல், தோனி பயிற்சிக்காக ஆடுகளத்தை நோக்கிச் செல்லும்போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்த வீடியோ ஒன்றும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Nayagan meendum varaar… 💛🥳#WhistlePodu #Anbuden 🦁 pic.twitter.com/3wQb1Zxppe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
Anbuden Vibe Check = 💛🤗🙌#WhistlePodu #Yellove pic.twitter.com/Wmigz6jXuK
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐபிஎல் 2023 தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil