ஐ.பி.எல் இறுதி போட்டி நடைபெறுவதற்கு முன்பே, சி.எஸ்.கே ’ரன்னர் அப் என்று டிஸ்பிளே ஸ்கிரினில் ஒளிபரப்பப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisment
ஐபிஎல் 2023 இறுதி போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருந்தது. அகமதாபாத்தில் நேற்று கனமழை பெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பே, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சி.எஸ்.கே ’ரன்னர் அப் என்று டிஸ்பிளே ஸ்கிரினில் வந்ததால், சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் போட்டி நடைபெறுவதற்கு முன்பே ”மேட்ச் பிக்சிங்’ நடைபெற்றதா? என்று இந்த புகைப்படத்தை பகிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போட்டி நடைபெறுவதற்கு முன்பே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பி.சி.சி.யை சி.எஸ்.கே ’ரன்னர் அப்’- ஆகத்தான் வருவார்கள் என்று முன்பே சொல்லிவிட்டது என்றும் சில கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போட்டி நடைபெறுவதற்கு முன்பு மைதானத்தில் இருக்கும் டிஸ்பிலே ஸ்கிரீனை சோதனை செய்வது வழக்கம். இதனால் சி.எஸ்.கே ரன்னர் அப் என்று சோதனை செய்யும்போது ஒளிபரப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒளிபரப்பப்பட்டாலும், சி.எஸ்.கே ’ரன்னர் அப்’ ஆக இருப்பதுபோல் ஏன்? சோதனை செய்ய வேண்டும் என்றும் கிரிகெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் முக்கிய பலமாக கருத்தப்படும் அம்பத்தி ராயுடு நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான அம்பத்தி ராயுடு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 2010ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
2018ம் ஆண்டு முதல் தற்போது வரை சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார். சுமார் 203 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 4,329 ரன்களை பெற்றுள்ளார்.