IPL 2023 Playoffs: CSK qualification scenario Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், நாளை (சனிக்கிழமை) மாலை 3:30 மணிக்கு டெல்லியில் நடக்கும் 67வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாப் 2-ல் வர சி.எஸ்.கே என்ன செய்ய வேண்டும்?
நடப்பு சீசனில் அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்கு தகுதி பெற 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளேஆஃப்-க்குள் நுழைய நாளை டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவது அவசியமாகும். அல்லது 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள லக்னோ அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சாதகமான நெட் ரன்ரரேட் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

அதாவது, சென்னை அணி டெல்லியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால், லக்னோ அணி கொல்கத்தாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடி வேண்டும். இப்படி நடந்த புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை சென்னை அணி பிடிக்க முடியும். தற்போது சென்னை அணியின் நெட் ரன்ரரேட் +0.381 ஆகவும், லக்னோ அணியின் நெட் ரன்ரரேட் +0.304 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023: லீக் சுற்றில் சென்னை – லக்னோ அணிக்கு மீதமுள்ள போட்டிகள்
மே 20, சனிக்கிழமை – டெல்லி – டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
மே 20, சனிக்கிழமை – கொல்கத்தா – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil